பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாள் பிள்ளைத் தமிழ் 20

"முனியே, நான்முகனே, முக்கண் அப்பா என்றும் ஞானச்சிகரமாகிய நம்மாழ்வார் கருத்தைப் பொருத்தமில்லை என்று மறுத்து அவர் கருத்தைத் திருத்திப் பிணக்கிட்டு வருத்தத்துக்கு ஆளாகின்றோம்.

"நாட்டினான் தெய்வம் எங்கும் என்றும் பிணக்கற அறுவகைச் சமயமும் நெறி உள்ளி உறைத்த கணக்கறு நலத்தினன்" என்றும் கூறப்பட்டுள்ள பொருளுரைகளை, அருளுரைகள் எனக் கொள்ளாது மருளுரைகள் என்று மறுத்து இருள் உறையுள் வாழ்பவர் ஆகின்றோம்.

"சுருக்கமாகச் சொல்லப்போனால் பிற தெய்வ நிந்தனை தவறு அன்று. பிற தெய்வத்தின் மேல் கொள்ளும் குரோதக் கிராதகச் செயல்களே விராதகுலச் செயல்களாகும்.

'இனிப்பு வகை உண்டவுடன் வேப்பம்பூ முதலிய கசப்பும் பரிமாறுவர். அது இனிப்பை இகழ்வதற்காக அன்று. இனிப்புச் சுவையை மிகுவித்துப் பயனைப் பெருக்குவதற்காகவே எனக் கோடல் வேண்டும்".

நம் நாட்டுச் சமயத்தை யாரும் நிறுவவில்லை. அதற்குப் பெயரும் இல்லை.இந்துமதம் என்பது பிறர் இட்ட பெயரே என்பது வரலாறு காட்டும் உண்மை. பெயர் குறிப்பிட வேண்டிய கட்டாயம் நேரும்போது சனாதன (மதம்) தர்மம்' என்றும் வைதிக(மதம்) தர்மம்' என்றும் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

இராமகிருட்டிணரின் தலைமாணாக்கர் விவேகானந்தர் முதலியோர் சனாதன தருமத்தை வளர்க்கப் பாடுபட்டனர். அதை வளர்க்க வேண்டும் என்பதற்காக அதன் பெருமையை உலகெங்கும் முரசறைந்து முழங்கினரே அன்றிப் பிற மதங்கள் ஆகிய இசுலாம், கிருத்துவ சமயங்களை மறுக்கவோ வெறுக்கவோ இல்லை. இதற்கு அவர் சொற்பொழிவுகளும் எழுத்துகளும்

சான்றாக உள்ளன.

நற் செய்யப் புல் தேயும் என்பது பழமொழி

நற் செய்யப் புல்தேய்ந்தார் போல நெடும்பகை தற்செய்யத் தான்ே கெடும்.

என்று பழமொழி நானூறு என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

இந்தப் பழமொழியை வைணவ உரையாசிரியர்கள் அடிக்கடி எடுத்தாளுவதுண்டு.

இந்தப் பழமொழியின் கருத்து, நீ உன் அறத்தை (சமயத்தை) வளர்த்தால் போதும். பிற சமயத்தை. அழிக்க முயலாதே! வயலில் தெல்