பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாசிரியரைப் பற்றி

இப் பிள்ளைத் தமிழை இன்சுவை பெருகிக் கற்பார் மனம் கனியப் பாடிய குன்றாப் பொருட்குவை, கலை வல்லுநன் பெயர் கூட அறியக் கூடவில்லை. வில்லிபுத்தூரிலுள்ள கோவில், திருமுக்குளம் நேரில் கண்டு காட்டுவது போல் காட்டும் திறம், இவர் பாடல்களில் பளிச்சிடுகின்றது.

கற்பனைகள் காட்டாறாகப் பெருக்கெடுத்தாலும் களிப்பாறாக அடங்கி உள்ளத்தில் தேங்கிஇன்பப் பயில் வளர்க்கின்றன. இத்தன்மையை நோக்கும் போது முற்றுணர்ந்தாரையும் வெற்றி கொள்ளும் இப் புலவர் திருவில்லிபுத்துார் ஊரினராக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.

ஆண்டாள் சந்திர கலாமாலை என ஒரு நூல் உள்ளது. அதன் நடை பெரும்பாலும் இவர் நடையை ஒத்துள்ளது. ஆதலால் அந் நூலைப் பாடியவராகவே இவர் இருக்கலாம் என்ற கருத்து வலியுறுகின்றது.

சந்திரகலா மாலை ஆசிரியர் தம்மை வைணவரில் பூர்வசிகையில் வந்தவராகவும், திருமருவும் வேயர் குலத்து உதித்த அந்தணராகவும். வில்லி எனப் பெயர் பெற்றவராகவும் அறிமுகப்படுத்திக் கொள்கின்றார். சந்திரகலா மாலையைப் பாடியவரே, பிள்ளைத்தமிழ் பாடியவருமாக இருக்க வாய்ப்பு அதிகம் இருப்பதால், இவர் பெயர் "வில்லி" என்று கொள்ளத் தடையில்லை. வில்லிபுத்துரளில் பிறந்தவர்கள் வில்லி என்றும், வில்லிபுத்தூர் ஆழ்வார் என்றும் பெயர் பெறுவதை மாபாரதம் பாடிய வில்லிபுத்தாழ்வார் பெயரால் அறியலாம். வேயர் குலம் என்பது குலத்தின் பெயர் அன்று. அஃதோர் ஊரின் பெயராம் அது மூங்கிற் குடி என்றும் அழைக்கப்பெறும்.

இராமநுச நூற்றந்தாதி அருளிய அமுதனார் தோன்றிய ஊர் மூங்கிற்குடி என்று அந் நூலின் தனியன் கூறுகின்றது.

ஆண்டாள்பிள்ளைத்தமிழை அற்புதமாத் தந்தவனே! ஈண்டுஆர்நின் பெற்றோர்கள்? ஏது உன் ஊர்? வேண்டாசிர் என்றாய் பணிவாய்! இயற்பெயரும் சொல்லாமல் நின்றாயே நன்றாமோ? செப்பு?”