பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 * ஆண்டாள் பிள்ளைத்தமிழ்

புடவி(அண்ட) வட்டத்தில் இளஞாயிறுகள் ஒர் ஆயிரத்தினை. போன்ற அரிய நாகமணிகளையுடைய உச்சியில் வைத்துள்ள ஆயிரமாகிய பல தலைகளையும் பொறி(புள்ளி)களைக் கொண்ட காடுபோல் நெருங்கிய படங்களை உடைய ஆதிசேடனது நெடிய திருமேனி முழுவதும் வட்டமாகச் சுருட்டிய அரியணையில் விளங்குகின்ற திருமாமணி மண்டபத்துக்குள்ளே,

இமையவர்கள் முன்னொரு காலத்தில், மந்திர மலையை மத்தாகக் கொண்டு அமுதினைப் பெற்ற திருப்பாற் கடலுக்கு நடுவில், தொண்டர்களாகிய முத்தர்களும், நித்தர்களும் ஆகிய பிரம்மன் முதலியோரும் வணங்கி நெருங்கிக்கொண்டுபுதும் போது, கையால் சுழற்றிய பிரம்பினால் அடித்து வரிசைப்படுத்து சேனாபதித் தலைவரின் அடியிணைகள் வணங்குவோம்.

நம்மாழ்வார்

திருஞான முத்திரை தரித்தகைத் தாமரைச்

செண்பகச் சடகோப னைத் திண்டிமக் கவிராச பண்டிதப் பாவலர்

திருத்தம்பி ரானைஎனையும் பெருமாநிலத்துஅடிமை கொண்டானை மதுரகவி

பேரின்பம் உறவழுத் தும் பெருமானை அனவரதம் மறவாது பரவுதும்

பெருநீர் உவட்டெடுத் தே அருமா மணிக்குலத் தொடுபசும் பொன்கொழித்து

அரவம்செய் பொன்னிஆற்றுள் அமுதத்தை உட்கொண்டு புனிதன்ஆ கியகோயில்

அண்ணன் என்னும்தகைமை சால்

குருஞான முதல்வனைப் பரவும்என் நாவினில்

குடிகொண்ட வில்லிபுத் துர்க் கோதையைப் பரவுபிள் ளைத்தமிழ்க் கவிதையான்

காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று தடைகளையும் விட்டு உள்ளகம் (ஆன்மா) இறைவனைப் பற்ற வேண்டும் என்பதனை அறிவுறுத்துவதே கண்டுவிரல் முதல் நடுவிரல் வரை விட்டுவிட்டுச் சுட்டுவிரலால் பெருவிரலைப் பற்றி நினைப்பதன் உட்பொருள். அது