பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

திருமங்கை மன்னன் முதலியோர்

புகழுஉற்று இருக்கும்முலை மலர்மங்கை கொழுநனைப்

புகழ் பொய்கை முதல்மூவர், தென் -

புதுவை, திருவஞ்சி, மழிசையின் அதிபர், பாகவதர்

பொன்னடித் துரளி, பாணன்,

எழுகூற் றிருக்கைதாண் டகம் மடல் திருமொழி

இசைத்த புகழ் ஆலிநா டன்

என்னும்ஒன் பதின்மர் பொன் னடிகளைப் போற்றுதும்

இளநிலா உழுதுஇறா லின்

மெழுகுஊற்றிருக்கும்மது மடைதிறந்து ஒழுகும் நதி

வேலைபோல் விரவிஉக ளும்

வெண்திரைப் பொன்னியுள் அரங்கனைப் போற்றாது

விண்நாள் கழித்தசிறி யோர்

தொழுகூற்று வன்தனது சென்னிமேல் மிதிதொண்டார்

தொண்டனேன் வில்லிபுத் துர்த் தோகையைப் பரவுபிள்ளைக்கவிதை முத்தமிழ்கள்

தொல்புவியின் மேல்தழைய வே.

(15)

சோலை மரங்களில் தேன்கூடுகள் தொங்கும் மரங்கள் வான்வரை உயர்த்து இருப்பதால், இளநிலாமுனை அந்தக் கூடுகளைக் குத்தி உடைக்கும். அதனால் அக்கூடுகளில் மெழுகினிடையே தேங்கிய ஊற்றாக இருக்கும் தேனானது, மடைபோல் திறந்து ஒழுகி ஆறாகப் பாயும். அவ் ஆறு தான்் காவிரி. அது கடல்போல இடம் எங்கும் பரவிப் பாயும். அதன் அலைகள் வெண்னுரை படர்ந்திருப்பதால் வெண்மையாகத் தோன்றும்.

அத்தகைய காவிரி ஆற்றின் நடுவில் அறிதுயில் கொண்ட அரங்கனைப் போற்றாமல், தம் வாழ்நாளை வீண் நாளாகக் கழித்த கீழ்மக்கள், இறுதிக் காலத்தில் கூற்றுவன் வரும்போது அவனை அஞ்சி அழுது தொழுவார்கள். ஆனால், அரங்கள் அடியார் நமன் வரும்போது, நமர் தமர் தலைகள் மீதே மிதித்துத் துவைப்பர் அத்தைகைய அடியார்க்கு அடியேன் ஆகிய நான், வில்லிபுத்துார்த் தோகையாகிய ஆண்டாள் நாச்சியாரைப் போற்றுகின்ற பிள்ளைக் கவிதையாகிய முத்தமிழ்ப் பாடல்கள் பழமையான உலகத்தில் தழைக்கும் பொருட்டு: