பக்கம்:திருவில்லிபுத்தூர் ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழிப்புரை - த. கோவேந்தன் +

அத்தகைய அமுதத் தேன் ஆறுகள் அருவிகளாகப் பாயும் சேடகிரி என்னும் பெயர் பெற்ற வடவேங்கடமலையானைப் போற்றுவோம்.

சோலைமலை அழகர்

சுழிக்கும் கரட மதக்கலுழிச்

சுவட்டுக் கவட்டுப் பிறைக்கோட்டுத்

தூங்கும் முடக்கு விழுதுயுரை o துளைககை வளைகாாக கடலகனலைக

கொழிக்கும் தறுகண் குழிசிறுகண்

குன்றுஒ தியமூ துரைக்கு உதவும்

குணமே ருன்னும் சோலைமலைக்

குழகர் அழகர் அருள் காக்க:

கழிக்குண்டு அகழ்தெண் திரைத்திருப்பாற்

கடலும் ம்டனுள் தளிநறவம்

களித்துக் குளித்துஉண் சுரும்பு இறைக்கும்

கமலா லயமும் சதுர்வேத

மொழிக்கும் அடங்கா மிதிலையுமே

முத்தூர் புத்தூர் ஆயதுஎன

முமமைய புவனமயூசூழபூததுரா

முத்துர் நகைப்பெண் அமுதினையே. (17)

உப்பங்கழிக் கிடங்குகளையுடையது தெள்ளிய திருப்பாற் கடல். பூக்களின் இதழ்களினுள் துளியாகிய மதுவை மகிழ்ந்து, மூழ்கி உண்ட வண்டுகள் பண்பாடுவது தாமரைக் கோவில்.

நால்மறைகளின் மொழிக்கும் அடங்காப் புகழ் உடையது மிதிலை. ஆகிய இவை மூன்றும் முத்துகள் ஊர்கின்ற ஒரே புதிய ஊராக ஆகியது என்று மூவுலகமும் புகழ்கின்ற சீர்வில்லிபுத்துளரில் தோன்றியவள் ஆண்டாள். அவள் வாய் இதழ்களின் மென்னகை அரும்பும்.

அத்தகைய பெண் அமுதினை சினக்கும் மும் மதத்தால் முத்துளைகளினின்றும் பெருகும் மதப்பெருக்கால் யானைக்குச் சுவடு(தழும்பு) உண்டாகும். இருகவையாகப் பிரிந்த பிறை போன்று வளைந்த தந்தங்கள்ை உடையது அது. அதன் துதிக்கை தொங்குவது: முடங்குவது ஆலமரத்தின் விழுதுபோல் தோன்றுவது: துளையுடைமையால் புழைக்கை எனப் பெயர் கொண்டது.