பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

திருவிளையாடற்புராணம்


"தேடி அவரைக் கண்டு அழைத்து வாருங்கள்" என்றான்.

"அவரை அவமானப்படுத்திவிட்டேன்" என்று கூறி வருந்தினான்.

அதுமுதல் இந்திரனின் செல்வம் குறைந்து கொண்டே வந்தது; மதிப்பும் தாழ்ந்து கொண்டே வந்தது; பொலிவும் நலிந்து கொண்டே வந்தது; தேவர்களும் வளமான வாழ்வை இழந்து கொண்டே வந்தனர். போக பூமி சோக பூமி ஆகியது. காரணம் என்ன? ஆசிரியனை மதிக்காமல் நடந்து கொண்டதே என அறிந்தான். என் செய்வது? யாரிடம் சென்று முறையிடுவது? படைத்தவன் தான் துயர் துடைப்பான் என்று தன்னிலும் மேலான படைப்புக் கடவுளாகிய நான்முகனைச் சந்திக்கச் சத்தியலோகம் சென்றான். கலைமகள் வீற்றிருக்கும் நாவினைப் படைத்த பிரமன் இவனைக் கண்டு நலம் விசாரித்தான்.

"செல்வம் குன்றி சொர்க்க லோகம் பொலிவிழந்து வருகிறது" என்றான் இந்திரன்.

பிரமன் கையில் வேதம் படித்துக் கொண்டிருந்தான்.

"நாணய மதிப்புக் குறைந்து விட்டதோ?" என்றான். நா நயம் குறைந்துவிட்டது” என்று பதில் சொன்னான்.

"பா நயத்தில் நீ பகர்வது என்ன? நடந்தது என்ன?”

"நாட்டிலே உழைப்புக் குறைந்து விட்டது; உற்பத்தி பெருக்காமல் அனைவரும் நாட்டியம் கூத்து இது போன்ற