பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

திருவிளையாடற்புராணம்

சினந்தனர். அவர்கள் மட்டும் நின்று போர் செய்து வீர மரணம் அடைந்தனர். பாண்டியன் வெற்றி அடைந்து விழாக் கொண்டாடினான்.

கோயில் திருப்பணிகள் பல புதியன செய்து வில்லும் அம்பும் பொன்னால் செய்து அந்தப் போர் நினைவுக்கு வடிவு தந்தான். சுந்தரனின் திருநாமம் அவ்வம்பில் பொறிக்கப்பட்டது. 

51. சங்கப் பலகை தந்த படலம்

மதுரையில் சங்கம் இருந்தது என்றும், நாற்பத்தெட்டு புலவர்கள் இருந்து தமிழ் ஆராய்ந்தனர் என்றும், நாற்பத்து ஒன்பதாவது புலவராகச் சோமசுந்தரர் அங்குத் தலைமை ஏற்றார் என்றும் கூறப்படுகின்றன. பிரமனுக்கு மூன்று மனைவியர்; சரசுவதி, சாவித்திரி, காயத்திரி என்பவர் ஆவார். இம்மூவருடன் பிரமன் காசிப்பதியில் எட்டு அசுவமேத யாகம் செய்து முடித்தபின் கங்கையில் முழுகிக் காசி விசுவநாதரை வழிபடச் சென்றான். வழியில் சரசுவதி வித்தியாதரப் பெண் ஒருத்தி பாடிக் கொண்டிருந்த இசை கேட்டு மயங்கிக் காலம் தாழ்த்தினாள். பிரமன் மற்றைய இருவரோடும் முழுகி எழுந்து கரை ஏறினான்.

காலம் தாழ்த்தி வந்த கலைமகளைப் பிரமன் கடிந்து கொண்டான். "நீ மானிட உலகுக்குச் சென்று பல காலம் உழல்வாயாக" என்று சபித்தான். உன் நாவில் குடி கொண்டிருக்கும் நான் உன்னைவிட்டு எப்படிப் பிரிய முடியும்? கல்வித் துணையில்லாமல் வாழ்க்கைத்துணைக்கு