பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

திருவிளையாடற்புராணம்

விளக்கி அவை தழைக்க இறையருள் வேண்டும் என்று கூறியவர், அவரைச் சுற்றிய கதைகள் இங்குக் கூறப்படு கின்றன.

அவர் பிறந்த ஊர் திருவாதவூர் என்பதாகும். அது பாண்டிய நாட்டில் வைகைக் கரையில் உள்ளது. அவருடைய இயற்பெயர் அறிந்தலது; அவர் பாடிய நூலைக் கொண்டு மாணிக்க வாசகர் என்று அழைக்கப்படுகிறார். ஊர் பெயரைக் கொண்டு திருவாதவூரர் என்று அழைக்கப்படுகிறார்.

திருவாதவூரில் அமாத்தியப் பிராமண குலத்திலே சைவம் தழைக்கப் பிறந்தவர் என்று கூறப்படுகிறது. வேதியர் குலத்தில் பிறந்தும் அவர் படைக்கலப் பயிற்சியும் போர் பற்றிய கல்வியறிவும் வல்லவராக இருந்தார். புற உலகில் அவர் பேரறிஞர் எனப் பாராட்டப் பெற்றார். அமைச்சர்களுள் அவர் தலைமை பெற்று விளங்கினார்.

நாடகத்தில் நடிப்பது போல அவர் புற வாழ்வு இயங்கியது. அவர் மனம் இறைவனுக்குத் தொண்டு செய்வதையே விரும்பியது. அது வெறியாகவும் அவரிடம் செயல்பட்டது.

அரிமர்த்தன பாண்டியன் தான் பொருள் பெட்டகத்தை அவரிடமே தந்து அதன் பொறுப்பையும் அவருக்கே உரியது ஆக்கினான். போருக்குச் சீரமைப்புத் தேவைப்பட்டது, படைகள் குதிரைகள் இன்றி வலுவிழந்து இருந்தன. சேனைத் தலைவர்கள் அரசனிடம் குதிரைகள் வாங்க வேண்டிய தேவையையும் அவசரத்தையும் உரைத்தனர்.