பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வலை வீசின படலம்

155


அதனை அடக்கி மடக்கிக் கரை சேர்த்தான். மீனவர் மகளைக் கொண்டு வந்து முன் நிறுத்தினான்'

"மீன் கண் உடையவளாக இருக்கிறாளே" என்றார்.

"மீனாட்சி" என்றான்.

"அவள் தான் ஆட்சி செய்த இடம் இம் மதுரை யாயிற்றே" என்றார்.

"சுந்தரன் நீ; இவளை ஏற்றுக் கொள்" என்றான்.

கைவலையில் சுறாவும், அவர் கண் வலையில் மீனாட்சியும் சிக்கினர்; அவளை மணம் செய்து கொண்டு விமோசனம் அளித்தார்.

சோமசுந்தரர் அவசரப்பட்டு மதுரைக்குத் திரும்ப வில்லை. திருவுத்தர கோச மங்கை என்னும் தலத்தில் தங்கி உமா தேவியார் வணங்கிக் கேட்க வேதத்தின் மறை பொருளை உரைத்துத் தெளிவு படுத்தினார். அங்கு வந்து வழிபட்ட பக்தர்களுக்கு வேண்டிய வரங்கள் தந்து பின் மதுரை வந்து அடைந்தனர். 

58. திருவாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்

ஊனைச் சுருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்தவர் மாணிக்க வாசகர். தேவாரம் பாடிய மூவருக்கும் பின் தோன்றியவர். மாணிக்க வாசகமும், தேவாரமும் இறைவனுக்குச்சூட்டப் படும் இசைப் பாமாலைகள் ஆகும். திருவாசகம் தத்துவக் கருத்துகளைக் கொண்டதாகும். உயிர்களின் இயல்பை