பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

திருவிளையாடற்புராணம்

விடுதலை தந்தான். உயிர் நீத்த அம்முனிவனின் மெய்யுடல் கீழே சாய்ந்தது. அவன் முதுகின் தண்டினை முறித்து தேவ தச்சனிடம் தந்து வச்சிரப்படை ஒன்று செய்து கொண்டான். வயிரம் பாய்ந்த அப்புதிய வாட்படை பகைவர்களைத் தகைப்பதற்கு உகந்ததாக விளங்கியது.

வாலியால் தோற்று ஓடிய அவன் தம்பி சுக்கிரீவன் மறுபடியும் அவனைப் போர்க் களத்தில் சந்தித்தது போல இந்திரன் அசுரன் இருக்குமிடம் தேடிப் போருக்கு அழைத்தான். வேள்விப் படைப்பில் தோன்றிய அந்த அசுரன் இந்திரனின் புதிய தாக்குதலுக்கு முன் நிற்க முடியாமல் பெருமரம் முறிந்து விழுந்ததைப்போல அலமரல் உற்றுச் சரிந்து விழுந்து சாய்ந்தான்.

கதை முற்றுப்பெறவில்லை. தொடர் கதையாகியது. மறுபடியும் கொலைப்பாவம் வந்து இந்திரனை அலைத்தது. ஓடினான் ஓடினான் ஓட ஓட அது விரட்டத் தொடங்கியது. மருட்டி அவனை வாட்டியது. உயிர் தப்பினால் போதும் என்று ஓடி ஒளிந்துகொள்ள இடம் தேடினான். தண்ணீர்க் குளத்தில் தாமரைத் தண்டு ஒன்றில் நுண்மையான வடிவு கொண்டு புகுந்து ஒளிந்து கொண்டான். அவனுக்காக அங்கேயே கரையில் அந்தப் 'பாவம்' காவல் காத்துக் கிடந்தது. தேவர்கள் ஆட்சிக்குத் தலைவன் இல்லாமையால் அவர்கள் புதிய தலைவனைத் தேடினர்.

பாரதக் கதையில் வரும் சந்திர குலத்து அரசன் ஒருவன் நகுடன் என்பவன் நூறு வேள்விகள் செய்து இந்திரப் பதவிக்குத் தகுதியுடையவன் ஆக ஆக்கிக்-