பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

திருவிளையாடற்புராணம

மணம் முடித்துக் கொண்டு செல்லுமாறு அறிவித்தார். சடங்கு செய்து முடிக்கச் சான்றுகள் இல்லையே என்று அவர்கள் அறிவித்தனர். வன்னிமரமும், கிணறும், சிவலிங்கமும் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இருந்தன. "அன்னியர் யாரும் இல்லை என்று கவலை வேண்டாம்; கன்னி இவளை மணக்க வேண்டும் என்று உன் மாமன் சொன்ன வார்த்தைகள் உண்டு; அதை உன் சுற்றத்தவர் அறிவதும் உண்டு; சுற்றமும் நட்பும் இல்லை என்று கற்றறிந்த நீ கவல வேண்டாம்; இதோ வன்னி மரம் இருக்கிறது மங்கலமாக இருந்து நிழல் செய்ய, கிணறு இருக்கிறது மங்கல நீர் கொண்டு குளிக்க, வழிபட உண்டு இறைவன் சிவலிங்கம். அதனால் இம் மூன்றையும் சான்றாகக் கொண்டு நீ மணம்முடித்துக்கொள்" என்றார்.

தனக்கு உயிரும் வாழ்வும் கொடுத்த உயர்ந்தோர் ஆகிய ஞானசம்பந்தர் ஒளிதந்த வெளிச்சத்தைக் கொண்டு அவர்கள் மணத் தம்பதிகளாகச் செல்வது அவர்களுக்கும் பாதுகாப்பினைத் தந்தது.

அவர்கள் ஊர் சென்றதும் எதிர்ப்பு இன்றி அவள் ஏற்றுக் கொள்ளப்பட்டாள். தான் ஈட்டிய சொத்தும் மாமன் மகளை மணந்து பெற்ற சொத்தும் சேர்ந்து அவன் இரட்டிப்புச் சொத்துகளுக்கு உரியவன் ஆனான். வணிகனாக இருந்ததால் வாணிபம் செய்து வான் பொருள் ஈட்டினான். தனபாக்கியம் பெற்றவன் புத்திர பாக்கியமும் பெற்றிருந்தான்.

மூத்தவளின் பிள்ளைகள் முரடர்களாகவளர்ந்தார்கள். இளையவளுக்கு ஒரே பிள்ளை. அவன் மிகவும் நல்லவனாகவும் சாதுவாகவும் இருந்ததால் தெருவில்