58
திருவிளையாடற்புராணம்
இந்திரன் இட்ட ஆசனங்களில் தான் காட்டிய குறிப்பின் படி சேரனும், சோழனும் அடக்கமாக அமர்ந்தனர். பாண்டியன் மட்டும் அவனுக்குச் சரிநிகர் சமானமாக அவன் வீற்றிருந்த சிங்காதனத்திலேயே பக்கத்தில் உட்கார்ந்ததால் மரியாதை குறைவாக அவன் நடந்து கொண்டதை இந்திரனால் பொறுக்க முடியவில்லை.
சேரனையும் சோழனையும் விளித்து உமக்கு வேண்டு வது யாது? என்று கேட்டான்.
மழை வேண்டியே அங்குத் தாம் வந்ததாக அறிவித்தனர். தழைக்கும் மழை பொழிவதாக என்று வரம் தந்து அவர்களை வழி அனுப்பி வைத்தான். பாண்டியனுக்குத் தக்க பாடம் கற்றுத் தர வேண்டுமென்று நினைத்து அவனை வெளிக்குப் புகழ்ந்து உள்ளுக்குள்ளே புமுங்கி ஒரு சூழ்ச்சி செய்தான்.
சுமக்க முடியாத பொன்னாரம் ஒன்று தந்து அவனை "மார்பில் அணிக" என்றான். அது தாங்க முடியாது அவன் தோள்கள் வீங்கும் என அவன் நினைத்தான். பூமாலை போல அதனை எளிதில் தாங்கித் தன் வலிமை ஓங்கக் காட்சி அளித்தான். அவன் திண்ணிய உரம் கண்டு இந்திரன் திகைப்பு அடைந்தான். ஆரம் பூண்ட பாண்டியன் என்னும் புகழ் மொழிக்கு உரியவன் என்று அவனைப் பாராட்டினான். வீரம் குன்றாது அவன் புகழ் மொழிக்குச் செவி சாய்க்காது புவி நோக்கித்திரும்பினான்.
சேர நாட்டிலும் சோழ நாட்டிலும் இந்திரனின் ஆணையால் செறிந்த மழை பெய்தது. பசும் புல்லும் பயிர்களும் விளைந்து அந்நாடுகள் வளம் கொழித்தன. பாண்டிய நாட்டில் மட்டும் மேகங்கள் மழை பெய்யாமல் விட்டன. நாடு வறட்சி அடைந்தது. அதைக்கண்டு