பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

திருவிளையாடற்புராணம்


படைகளை ஒரு புறம் நிறுத்தி விட்டுத் தான் மட்டும் தனியனாய் நின்று மேருமலைத் தலைவனை நேரில்வரும்படி அழைத்தான். உச்சி நிமிர்ந்த தலைவணங்காத அக்காவலன் இவன் ஏவலை மதிக்கவில்லை. சிவன் அனுப்பிய சிறுவன் என்று சொல்லியும் அவன் புறக்கணித்தான். வேறு வழியில்லை; தான் கொண்டு வந்த செண்டைக் கொண்டு அவன் சிண்டை அடித்தான். அந்த மண்டு வெகுண்டு எழாமல் வேண்டுவது யாது என்றான். அடி அடித்தால் அம்மியும் நகரும் என்னும் பழமொழி உண்மையாயிற்று. இம்மியும் நகராத அவன் இமைப்பொழுதில் வந்து ஏவல் கேட்டான்.

பொற்குவியல் இருக்கும் இடத்தைக் காட்டு என்றான்: "மாமர நிழலில் உள்ள பாறையின் கீழ் புதையல் இருக்கிறது." என்று மேருமலைத் தலைவன் சொல்ல அவன் கூறியபடியே பாறையைத் தள்ளி வேண்டிய அளவு வாரி எடுத்துக் கொண்டு மறுபடியும் பாறை கொண்டு அவ்வழியை மறைத்து தன் பெயரையும் பெருமையையும் பொறித்து வந்தான்.

பொற்சுமையைத் தன் தோளிலும் மற்றுமுள்ள வாகனங்களிலும் வைத்துக் காவலர் சூழப் பாண்டிய நாடு கொண்டு வந்து சேர்த்தான். சோம சுந்தரக் கடவுளை வணங்கி நன்றி நவின்று, கொண்டு வந்த பொருளைச் சேர்த்துப் பொதித்து வைக்காமல் அறங்களுக்கும் பொருள் அற்றவர்களுக்கும் வாரி வழங்கினான். நகையில்லாத முகத்தைக் காணமுடிந்தது; ஆனால் நகை அணியாத பெண்களைக்காண முடியாமல் அணிகலன்கள் அணிந்திருந்தனர்

கோள்கள் உரிய இடத்தில் நிலை பெற நாள்கள் நன்மை பெற்றன. மழை உரிய காலத்தில் பெய்ய வறிய நிலை மாறியது. மன நிறைவு பெற்று அவன் தன் கடமை