பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

திருவிளையாடற்புராணம்

மீனாட்சி அம்மையாரோடு சொக்கட்டான் ஆடிக் கொண்டு இருந்தார். கோயிலுள் அடைபட்டு இருந்த அவர்கள் விடுபட்டு வேடுவனும் வேடுவச்சியுமாக அங்கே அமர்ந்து ஆடிக் கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த அப்பார்ப்பன இளைஞன் இவர்கள் பக்கம் வந்து நின்றான்.

மீனாட்சி அம்மை இவனைக் கண்ணெடுத்துப் பார்க்க விரும்பவில்லை. கொலைப்பாதகன் என்பதால் அவனை வெறுத்து ஒதுக்கினாள்; ஒளிபெற வேண்டிய மாணிக்கம் சகதியில் விழுந்து விட்டதைப் போன்று அறிவு மிக்க வாழ்க்கை வாழ வேண்டியவன் பாவக் குழியில் விழுந்து பரிதாபத்துக்கு உரியவனாக இருந்தான்; பரமசிவன் அருள் உள்ளம் கொண்டு இந்த மருட்சி கொண்டவனைக் காப்பாற்ற நினைத்தார் வேட்டுவ உருவில் அவனிடம் அங்கு வந்து ஏன் என்று கேட்டு அறிய முற்பட்டார்.

அவன் தான் செய்த பழிபாவங்களை எடுத்துச் சொல்லி விமோசனம் தேட வந்ததாக உரைத்தான். அவன் திருந்தி வாழ முடியும் என்பதை இறைவன் அறிந்தவர். மானுடன் தவறு செய்துவிட்டாலே அவன் வாழத் தகுதியற்றவன் அல்லன் என்பதை அவர் ஏற்றுக்கொள்ள வில்லை. சட்டங்கள் மற்றவர்கள் அந்தத் தவறுகள். செய்யக்கூடாது என்பதைக் காட்டி அச்சுறுத்தவே கடுந்தண்டனைகள் விதிக்கின்றன. இறைவன் பாவ மன்னிப்புத் தந்து புனர்வாழ்வு தர விரும்பினார். பாவம் தீர வழி வகைகளைக் கூறினார்.

"அதோ எதிரே இருக்கும் பொற்றாமரைக் குளத்தில் முழுகி இறைவன் நற்றாளை நாள்தோறும் வணங்கி