பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


வுலகங்களையும் ஈன்று காத்தளிக்கும் நங்கையாகிய பராசத்தியாலும் நடுவாய் விரும்பத்தக்க மணவாளனாகி மன்னுயிர்களின் உள்ளந்தோறும் அம்மையப்பனாய் நிலைநிறுத்தப் பெறுவன். இதுவே எம்முடைய தலைவனாகிய சிவபெருமானது உண்மை இயல்பாகும். எ-று.

“நங்கையினால்” என்ற தொடர், முதலடியில் “நம்கையினால்’’ என இருசொற்களாய்ப் பிரிந்தும், இரண்டாமடியில் “நங்கையினால்” என ஒருசொல்லாய் நின்றும் இருபொருள் தந்தது. “நாம் நம் கையினால் அனைத்தும் செய்தாற்போல், நாயகனும் நங்கையினால் நாடு அனைத்தும் செய்தளிக்கும்” என இயையும். நம்முடம்பின் வேறுபடாத கை உடம்பின் செயல்வடிவாய் நின்று நம்முடம்பின் புறத்தேயும் விரிந்து செயலாற்றுதல் போன்று, சிவத்தின் வேறுபடாத பராசத்தியாகிய நங்கையும் இறைவனது செயலாற்றலாய்ப் புறத்தேயும் விரிந்து பரவி உலகங்களையெல்லாம் படைத்துக் காத்தருள்கின்ருளாதலின் சத்தியும் சிவமும் ஒருபொருளே என்பதாம். சிவத்தின் இயல்பு அதனிற் பிரிவறநின்ற திருவருளாகிய சத்தியின் துணைகொண்டே உயிர்களின் உள்ளந்தோறும் நாட்டப்பெறுவது என்பார், “நங்கையினும் நம்பியாய்த் தான் நடுவே நாட்டப் பெறும் இதுகாண் எம்பெருமானார்தம் இயல்பு” என்றார். “உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி, அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதனால்’’ என வரும் திருவாசகச் செழுமறையின் பொருளை விரித்துரைப்பதாக இத்திருக்களிற்றுப்படியார் அமைந்துள்ள நுட்பம் அறிஞர்களால் வியந்து போற்றுதற் குரியதாகும்.

சிவமாகிய பரம்பொருளினின்றும் அதனிற் பிரிவின்றித் திகழும் திருவருளாகிய சத்தி தோன்றுதலின், முழுமுதற் பொருளாகிய சிவம் அருளாகிய சத்திக்கு நிலைக்களமாகத் திகழ்வது என்பார், “உடையாள் உன்றன் நடுவிருக்கும்” என்றும், அத்தகைய திருவருளையே தனக்குரிய திருமேனியாகக் கொண்டு தோன்றி உயிர்களுக்கு எளிவந்து அருள்புரிதல் சிவபரம் பொருளின் இயல்பென்பார், “உடையாள் நடுவுள் நீயிருத்தி” என்றும், இங்ஙனம் முழுமுதற் பொருளொன்றே சத்தியும் சிவமுமாகிய தன்மையால் அம்மையோடு. அப்பனாகி உயிர்கள்தோறும் உயிர்க்குயிராய் எழுந்தருளியுள்ளது என்பார், “அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதனால்” என்றும் திருவாதவூரடிகள் எம்பெருமானார்தம் இயல்பு இது என விளக்கி யருளிய திறம் இங்கு ஒப்புநோக்கியுணரத் தக்கதாகும்.

இங்ஙனம் முழு முதற்பொருளொன்றே சத்தியும் சிவமும் என ஒருமையின் இருமை நிலையினதாய் மன்னுயிர்க்கு அருள் வழங்குந் திறத்தினை,