பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


களின் வழிகளையடைத்து அகத்தே செல்லும் சுழுமுனை வழியினைத் திறந்து திருவைந்தெழுத்தின் துணைகொண்டு நாத தத்துவத்தில் நிலைபெற்ற சிவபரம்பொருளை ஆறாதாரங்களுக்கும் மேலான மீதானத்திலே கூடி நின்று, உலகவாதனைகளால் வரும் இடர்கள் நீங்கி இன்புறுவர் என்பது,

"ஊனி லுயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர்
ஞான விளக்கினை யேற்றி நன்புலத்
தேனை வழிதிறந் தேத்துவார்க்கிட
ரான கெடுப்பன அஞ்செழுத்துமே” (3-22-3)

எனவும்,

உடம்பெனு மனையகத்துள் உள்ளமே தகளியாக
மடம்படு முணர்நெய்யட்டி யுயிரெனுந் திரிமயக்கி
இடம்படு ஞானத்தீயால் எரிகொள விருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காணலாமே. (4-75-4)

எனவும்வரும் திருப்பாடல்களாற் புலனாம்.

“கழிப்பாலை மேய கபாலப்பனார்
வானிடத்தை யூடறுத்து வல்லைச் செல்லும்
வழிவைத்தார்க் கவ்வழியே போதுநாமே” (3-22-3)

எனவரும் திருத்தாண்டகத் தொடர் இச் சிவயோக நெறியினைக் குறித்து நிற்றலும், இதற்கு இலக்கணமாக,

“நாலு கரணங் களுமொன்றாய் நல்லஅறிவு மேற்கொண்டு
காலும் பிரம நாடிவழிக் கருத்துச் செலுத்தக் கபாலநடு
ஏலவேமுன் பயின்றநெறி எடுத்த மறைமூலந் திறப்ப
மூலமுதல்வர் திருப்பாதம் அடைவார் கயிலை முன்னடைந்தார்”

(பெருமிழலை-10)

எனப் பெருமிழலைக் குறும்பநாயனார் வரலாறு அமைந்துள்ளமையும்,

"மனத்தகத்தான் தலைமேலான்' (6–8–5)

"ஓங்கினாரெம துச்சியாரே' {2-26-2)

எனவரும் திருமுறைகளும் மீதானமாகிய நாலாம் நிலையினைக் குறித்தல் காண்க.