பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்



(இ-ள்) (திருவருள்காட்டக்) காணுந் தொழிலையுடைய ஆன்மாவின் இயல்பினை உள்ளவாறு கண்ட சிவயோகிகளே, காண்கின்றோம் என்ற சுட்டறிவு நீங்கச் சிவனைக் காண்பார்கள். அங்ஙனங் காண்கின்றவர்களே காண்பானாகிய ஆன்மாவும் காணப்படும் பொருளாகிய சிவமும் எனப் பிரித்துணரும் வேற்றுமையின்றித் தம்மை மறந்து நினைத்தற்குரிய சிவத்துடன் ஒன்றிவிடுதலால் அம்மெய்ப்பொருளை உள்ளவாறு கண்டு அநுபவிப்பவராவரென்று அறிவாயாக எறு.

காண்கின்றதோர்பொருள் என்றது, சத்து, அசத்து என்னும் இருதிறப்பொருள்களையும் அறிவதாய், அறிவிக்க அறியுந்தன்மை யதாய், அவ்விருதிறப் பொருளின்கண்ணும் நிலைபெற்ற அநுபவ வறிவுடையதாய்ச் சதசத்தாயுள்ள ஆன்மாவை. கண்ணுதல் என்றது துதல்விழி நாட்டத்திறையோனாகிய சிவபரம்பொருளை. காட்சியறக் கண்ணுதலைக் காண்கின்றார் என இயையும். காட்சியறக் காணுதலாவது நாமே காண்கின்றோம் என்னும் தற்போதங் கெடத் திருவருளோடு உடனாய் ஒன்றியுணர்தல்.


கஉ. மூலை யிருந்தாரை முற்றத்தே விட்டவர்
சாலப் பெரியரென் றுந்தீபற
தவத்திற் றலைவரென் றுந்தீபற.

இது சிவயோக நெறியினை அறிவுறுத்திய குருவின் பெருமையினை வியந்து போற்றுகின்றது.

(இ-ள்) அன்னையின் வயிறு, ஐம்பொறிகள், நனவு, கனவு உறக்கம் பேருறக்கம், உயிர்ப்படக்கம் ஆகிய உணர்வு நிலைகள் முதலிய மூலைகளிலேயுண்டான இருளினாலே மறைந்து நினைப்பும் மறப்பும் உடையராய்ச் சுகதுக்கங்களாகிய மயக்கத்தில் அழுந்தின ஆன்மாக்களைக் கீழ்நோக்கின உணர்வை யொழித்துப் பேரின்பத்தில் அழுந்தும்படி கூட்டுவித்த அருட்குருவானவர் மிகவும் அளவிடப்படாத பெருமையினையுடைய இறைவனாவர்; பண்டை நற்றவத்தின் பயனாக ஆன்மாவை மெய்யுணர்வளித்து ஆட்கொள்ள எழுந்தருளிய முதல்வர் என்றுணர்வாயாக எ-று.

“மாதாவிடத்துண்டான சுரோணிதத்தினிலே பிதாவினிடத் துண்டாகிய சுக்கிலம் பவளப் பையில் முத்தை வைத்தாற்போலப் படுகிற நாளில் சீவனானது, பிராணவாயு வாகனமாகவும், மனம் வழியாகவும், சிவனுடைய ஆஞ்ஞையாலே (ஆணையாலே) சென்று, சுக்கில சுரோணிதத்தின் தலையிலே பதிந்து, கன்மத்துக்கீடாக மூன்றரைக்கோடி யுரோமத்துவாரமும், எழுபத்தீராயிரம் நாடியும், வாயுவிற் பிரதானமான தசவாயுவும், நவத்துவாரமும், எண்சா