பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 திருவெம்பாவை விளக்கம்

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அங்கு அப்பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்’ என்பது விநயமாக உரையாடும் கன்னியர் தம் பேச்சுத் திறத்தினை

உணர்த்தி நின்றது.

பொன்னார் திருவடிக்கு ஒன்றுண்டு விண்ணப்பம்’

என்பார் அப்பரடிகளும் (திருத்துரங்கானை மாடம், திருவிருத்தம் 1).

சிவபெருமானை மனமொழி மெய்களால் போற்று வதே தம் கடன் என நினைப்பார் போல அதனை உடன் பாட்டான் அன்றி எதிர்மறை முகத்தான் உணர்த்துவார்

போல,

எங்கொங்கை கின்அன்பர் அல்லார் தோள் சேர ற்க

எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க

கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காண ற்க என்றனர்.

எங்களது ந கில்கள் உன்னுடைய அன்பர்கள் அல்லாதாரது ேத ா ள் க ளி லு ம் பொருந்தாதொழி வதாகுக. எமது கைகள் உனக்கன்றி வேறொருவருக்கும் எத்தகைய தொண்டுகளையும் செய்யாதொழிவன வாகுக. எமது கண்கள் இரவிலும் பகலிலும் உன்னை யன்றி வேறொரு பொருளையும் காணா தொழிவதாகுக’’ என்றனர். *

இறைவன் அடைக்கலமாகக் கொண்ட பிறகு நிகழும் செயல்கள் அனைத்தும் இறைவன் இச்சைப்படி நிகழும் செயல் களாதலின் கன்னியர் இவ்வாறு கருதினர்.

அன்றே என்றன் ஆவியும் உடலும்

உடைமை எலலாமும குன்றே அனையாய் என்னை ஆட்கொண்ட

போதே கொண்டிலையோ