பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்டர் சி. பாலசுப்பிரமணியன் 99

இன்றோர் இடையூறு எனக்குண்டோ

என்தோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழைசெய்வாய்

நானோ இதற்கு நாயகமே .

(குழைத்தபத்து : 7)

சிவனடியார்களே தங்கள் கணவராக வாய்க்க வேண்டும் என்பதும், சிவனடிக்கே தொண்டு செயும் எங்கள் கைகள் என்பதும், இரவு பகல் எந்நேரமும் சிவனடியன்றிப் பிறிதொன்றை எங்கள் கண்கள் காணா என்பதும் கன்னியர் கொண்ட உறுதியாகும்.

நனவிலும் கனவினும் கம்பா வுன்னை மனவினும் வழிபடன் மறவேன் அம்மான்

(திருவாவ வடுதுறை: 3) வன்பர் திருஞானசம்பந்தரும்.

இவ்விண்ணப்பங்களை முறையே நீ ஏற்றுக் கொண் டால் சூரியன் எந்தத் திசையில் உதித்தாலும் கவலை இல்லை எங்களுக்கு என்றார்கள். எங்கெழிலென் ஞாயிறு எமக்கு ஏங்கெழிலென் ஞாயிறென வின்னணம் வளர்ந்தோம்’ என்பது சிந்தாமணி (1793).

சிவத் தொண்டர்கள் தங்கள் கரணங்கள் அனைத்தும் விவன் திருப்பணிக்கே உரியன எனக் கருதினர்.

இத்திருப்பாட்டு, இறைவனுக்கு மனம், மொழி, மெய் ஆகிய முக்கரணங்களாலும் பணி செய்யும் பாங்கினை உணர்த்தி நிற்கின்றது.

உள்ளத்தையும் இங்கு என்னையும்

கின்கையினில் ஒப்புவித்தும்

கள்ளத்தைச் செய்யும் வினையால் வருங்தக் கணக்கும் உண்டோ