பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்டர் சி. பாலசுப்பிரமணியன் 107

-

இப் பள்ளியெழுச்சி’ என்னும் இலக்கிய வகை நம் ட்டில் பழங்காலந் தொடங்கியே நிலவி வந்தது வன்பதற்குத் தொல்காப்பியனாரின் தொல்காப்பிய

|லக்கணமே சான்றாகத் துலங்குகின்றது.

தாவின் கல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்

-தொல்: புறத்திணை 36

என்னும் நூற்பா குறிப்பிடும் துயிலெடை நிலையுள் நிருப்பள்ளியெழுச்சி அடங்குகின்றது. தம் வலியால் வெற்றிக்கு வித்திட்டுவிட்டுப் பாசறைக்கண் ஒரு சிறிது பல வருத்தமும் இன்றித் துயின்ற அரசர்க்கு நல்ல 1ழைக் கொடுத்தலைக் கருதிய சூதர் - அதாவது மின்றேத்துவோர் அரசனைத் துயிலினின்றும் நீங்கி எழப் படுவது துயிலெடை நிலை என்று கூறப்படும். வைகறையில் துயிலெழுவது வழக்கமாதலின் அரசர்கள் கங்கள் தங்கள் அரண்மனைகளில் வைகறையிற் பாடும் பாணர்களை நியமித்திருந்தனர் என்பது பழந்தமிழ் பால்கள் கொண்டு உணரலாம். இவ்வாறு நியமிக்கப் பெற்ற பாணர்கள் தாம் வாழ்த்திப் பாடும் அரசனது வெற்றிப் பெருமைகளையும் அவனுடைய முன்னோர் பெருமைகளையும் ஏத்திப் பாடுவது என்பது மரபு. அவ்வாறு துயிலுணர்த்துவது விடியற்காலத்தில் நிகழ்வது ஆதலின் புறவுலகில் நிகழும் நிகழ்ச்சிகளையுங் கூறிப் பள்ளியெழுச்சி பாடுவாராயினர். எனவே பள்ளியெழுச்சிப் பாடல்களில் வைகறை வருணனை கட்டாயம் இடம் பெற்றிருக்கக் காணலாம்.

தமிழில் திருவாதவூரடிகளாம் மாணிக்கவாசகர், ஆழ்வார்களுள் தொண்டரடிப் பொடியாழ்வார், பிற்காலப் பெரியவருள் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் ஆகிய