உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. போற்றி என் வாழ் முதலாகிய பொருளே

போற்றி! என் வாழ்முதல்

ஆகிய பொருளே ! புலர்ந்தது; பூங்கழற்கு

இணைதுணை மலர் கொண்டு ஏற்றிகின் திருமுகத்து

எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுகின்

திருவடி தொழுகோம்; சேற்றிதழ்க் கமலங்கள்

மலரும் தண் வயல்சூழ் திருப்பெருங் துறையுறை

சிவபெரு மானே! ஏற்றுயர் கொடியுடை

யாய்! எனை உடையாய்! எம்பெரு மான்!பள்ளி

எழுந்தரு ளாயே!

தமிழில் வழங்கும் தொண்ணுாற்றாறு வகைப் பிரபந்தங்களில் ஒன்று திருப்பள்ளியெழுச்சி’யாகும் மாணிக்கவாசகப் பெருமானால் அருளிச் செய்யப்பெற்ற திருவாசகத்தின் ஒரு பகுதியாக இது விளங்குகின்றது சிவபெருமானைத் திருப்பள்ளியை விட்டு எழுந்தருளுமா வேண்டுவதே இதன் பொருளாகும். எனவே பாரி யெழுச்சி எனும் தொடர், பள்ளியினின்றும் துயி உணர்ந்து நீங்குதலைக் குறித்தது ஆகின்றது.