பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கூவின பூங்குயில் கூவின கோழி

கூவின கோழி, குருகுகள் இயம்பின;

இயம்பின சங்கம், ஒவின தாரகை

ஒளி, ஒளி உதயத்(து) ஒருப்படு கின்றது;

விருப்பொடு நமக்குத் தேவ!நற் செறிகழற்

றாளிணை காட்டாய்! திருப்பெருங் துறையுறை

சிவபெரு மானே! யாவரும் அறிவரி

யாய்! எமக் கெளியாய்! எம்பெரு மான்!ர்பள்ளி

எழுந்தரு ளாயே!

சென்ற திருப்பாட்டில் கதிரவன் உதயம் காணு. தலையும், அதன் காரணமாக விரிந்து பரந்த வானில் ஒளி பரவுதலையும், இரவெல்லாம் கூம்பியிருந்த தாமரை மலர்கள் மலர்தலையும், அது பொழுது தாமரை மலர் களில் தங்கியிருந்த வண்டுக் கூட்டங்கள் இன்னிசை பாடி யதனையும் விளங்கப் பாடிய மாணிக்கவாசகர், கூவின பூங்குயில் கூவின கோழி எனத் தொடங்கும் இத்திருப் பாட்டில் பின்னர் நிகழும் காலை நிகழ்ச்சிகளை அறிவிக்க

8