பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 திருவெம்பாவை விளக்கம்

முனைவார் முதற்கண் இறைவனை விளிப்பாராய்த் ‘தேவ’ என்றார். ‘தேவ’ என்னும் விளி அண்மை சுட்டியாகும். அவன் தேவ தேவனாக விளங்கும் திறத்தைச் செப்பியது. தேவர்களுக்கெல்லாம் தேவ னாக - மகாதேவனாக விளங்கும் இறைவன், உலக உயிர்களிடத்துக் கொண்ட அளவற்ற அருள் காரணமாகத் திருக்கோயில்களில் விளக்கமாக எழுந்தருளியுள்ளான் என்பதனை எடுத்து மொழிவார் போல் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே’ என்றார். இறைவனை அவன் காட்டக் காட்டினால் அறியலாமே அன்றிப் பிறரால் எளிதில் அறியவொண்ணாதவன் என்பதனை விளக்க முற்படுவாராய் * யாவரும் அறிவரியாய்’ என்றார்.

பாரார் விசும்புள்ளார் பாதாளத்தார் புறத்தார் யாராலுங் காண்டற்கரியார் எமக்கெளிய பேராளன்

-திருவம்மானை: 2

என்று மணிவாசகரே திருவம்மானைப் பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளபடி, பிறருக்கு அரியனாக விளங்கும் இறைவன் தன்னை வணங்கும் அடியவர்க்கு எளியவனாக இருக்கும் தன்மையை உணர்த்தியவாறாம். எனவே எமக்கு எளியாய்” என்றார். மேலைத் திருப்பாட்டுப் போன்றே, இத்திருப்பாடலிலும் ‘தேவ’ என்றும், திருப் பெருந்துறை சிவபெருமானே’ என்றும், யாவரும் அறி வரியாய்” என்றும், * எமக்கு எளியாய்’ என்றும், * எம்பெருமான்’ என்றும் ஐந்து முறை ஆண்டவனை விளித்தனர்.

இனிக் காலைப்போதில் நிகழும் நிகழ்ச்சிகளை அறிவுறுத்துவான் வேண்டிப் பூங்குயில் கூவின’ என்றார். குயில் இனிய இசையுடன் பாடக் கூடிய குறுந்தாளுடைய பிள்ளைப் பறவைகளில் ஒன்றாகும். அழகான குயில் இனிமையான குரலில் கூவிற்று.