பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 119

ஈண்டு ஒரு நயமும் கூறுவர். குயிலை எவரும் பிடித்து வளர்க்க முற்பட மாட்டார்கள். குயில்கள் சோலைகளில் தங்கி, தமக்கு மகிழ்ச்சி மிகுகின்றபொழுது இனிய குரலெடுத்துக் கூவுவது வழக்கம். இவ்வாறு வெளியிற் பரந்து திரியும் பறவையான குயில் கூவிற்று. வீட்டில் வளரும் பறவைகள் கூவினவோ என்று வினவ முற்படு வார்க்கு விடை சொல்வதே போல, கோழி கூவின’ என்றார். ஈண்டுக் கோழி என்பது சேவலைக் குறித்தது. அது வீட்டுப் பறவையாக நாட்டு மக்களால் வளர்க்கப் பெறுவது. வைகறையில் கொக்கரக்கோ’ என்று குர லெடுத்துக் கூவி, உறங்குபவரை எழுப்புவது கோழியின் செயல். கொக்கு - மாமரம்; அதாவது மாமரமாக வடிவெடுத்து நின்ற சூரன். அது - வெட்டும் கோ - தலைவன் முருகன் - அதாவது பத்மாசூரனை வத ஞ் செய்த முருகவேள் என்பதாகும். கோழி வைகறையில் மாமரமாக நின்ற சூரனைக் கொன்ற சுப்பிரமணியரைக் கூவி நிற்கிறது என்பர் முருக அடியார்கள்.

பொறிமயிர் வாரணம் வைகறை இயம்பி (673) என்பது மதுரைக்காஞ்சி.

சேவலொடு பிற பறவைகளும் ஒலித்தன என்பார் ‘குருகுகள் இயம்பின’ என்றார். குருகுகள் சிறு பறவை களைக் குறிக்கும் அஃறிணை உயிர்களாகிய குயில், கோழி, குருகுகள் ஒலித்தன; ஆனால் மனிதர்கள் இன்னும் எழவில்லையே எனக் கேட்பார்க்கு விடையாகச் சங்கம் இயம்பின என்றார். சங்கம் - சங்கு தானாக முழங் காது. அதனை ஊதி ஒலியெழுப்புவர் ஒருவர் வேண்டும். திருப்பாவைத் திருப்பாட்டிலும்,

எங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய்

கூம்பினகாண்