பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 திருவெம்பாவை விளக்கம்

செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்

-திருப்பாவை; 1.4)

என்றார். அதிகாலையில் சங்கங்கள் இறையடியார்க ளால் ஊதப்பெறுவது மங்கல வழக்கென்று காட்டும்,

விருப்பொடு வெண்சங்கம் ஊதா ஊரும்

-தனித் திருத்தாண்டகம்: 5

என்று திருநாவுக்கரசரும்,

வால்வெண் சங்கொடு வகை பெற் றோங்கிய காலை முரசம் கனை குரல் இயம்பு

-சிலம்பு; ஊர்காண் காதை: 13-14

என்று இளங்கோவடிகளும் வைகறையில் சங்கம் முழங்கு தலைக் குறிப்பிட்டுள்ளனர். கதிரவன் ஒளி மேல்நோக்கி வானத்தில் எங்கும் பரவுதலும், விண்மீன்களின் ஒளி மழுங்கின என்பார் ஒவின தாரகை யொளி யொளி யுதயத் தொருப்படுகின்றது” என்றார்.

இவ்வாறு வைகறை நிகழ்ச்சிகளை வனப்புடன் மொழிந்து மாணிக்கவாசகர் இறைவனது தாளினை களைக் காட்டுமாறு, தேவ! நற்செறிகழற் றாளிணை காட்டாய்” என்ற தொடரால் குறிப்பிடுகின்றார். அதுவும் இவிருப்பத்துடனே அவன் வீரக்கழல் அணிந்த நன்மையை அருளும் திருவடிகள் இரண்டினையும் காட்ட வேண்டும் என்கிறார்.

காண்பார்யார் கண்ணுதலாய் காட்டாக்காலே

-தனித் திருத்தாண்டகம்: 3

என்ற அப்பரடிகளின் தனித் திருத்தாண்டகத் தொடர் இறைவன் திருவடிகள், அவன் திருவருளால் காட்டினால் அன்றிக் காண முடியாமையை அறிவுறுத்தி நின்றது.