பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 123

மானிடப் பிறவி எதற்கு வாய்க்கின்றது என்றால் அவனருளாலே அவன் தாள் வணங்கி” வீடுபேறு பெறு வதற்காகும். உலக இன்பங்களைத் துய்த்து, பின் பற்றறுத்து, பரமன் தாளினை அடைய வேண்டும் என்பது தமிழர் கண்ட நெறி. கற்றதனால் ஆய பயன் இறைவன் நற்றாள் தொழுவது” என்பார் திருவள்ளுவர். எனவே உலக உயிர்கள் வைகறையில் துயிலெழுந்து எவ்வெவ் முறையில் இறைவன் திருப்பாதங்களை வணங்கி நிற் கின்றன என்பதனை உணர்த்துவாராய் மாணிக்கவாசகப் பெருமான் முதலில் இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்’ என்றார். இனிமை பயப்பதும், பிறரை நம்மாட்டு இசையச் செய்வதும் இசையாதலின் இதற்கண் இசையினைக் குறிப்பிட்டார். வீணையிலும் யாழிலும் இசை சிறக்கின்றது. இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க’ என்று திருவண்டப்பகுதி (35)யில் மணிவாசகரே இறையின் வீணை இசையை விரும்பியவன் என்று குறிப்பிடு கின்றார். இசைக் கருவிகளாம் வீணையும் யாழும் கொண்டு இசைவாணர்கள் இறைவன் புகழை ஒரு மருங்கு -பக்கம் பாடி நின்றனர் என்று குறிப்பிடுகின்றார். பிறிதொரு பக்கத்தில் இன்னிசையோடு மந்திரமும் தோத்திரமும் ஒதினர் என்று குறிப்பிடு முகமாக இருக் கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்’ என்றார். நால் வேதங்களாம் இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் எனப் படுவனவற்றுள் முதலாவதாகத் திகழும் வேதம் இருக்கு வேதமாகும். இது வடமொழியில் அ ைம ந் த து. தோத்திரப் பாக்கள் தமிழ் மொழியில் அமைந்தனவாகும். இறைவனுக்கு நீராட்டும்பொழுது மந்திரம் ஒதுதல் மரபாகும்.

தொண்டனேன் பட்டதென்னே தூயகாவிரியின் கன்னிர் கொண்டிருக் கோதியாட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி (தனித்திரு நேரிசை :1)