பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

இன்னிசை வீணையர்

யாழினர் ஒருபால்; இருக்கொடு தோத்திரம்

இயம்பினர் ஒருபால்; துன்னிய பிணைமலர்க்

கையினர் ஒருபால்; தொழுகையர் அழுகையர்

துவள்கையர் ஒருபால்; சென்னியில் அஞ்சலி

கூப்பினர் ஒருபால்; திருப்பெருங் துறையுறை

சிவபெரு மானே! என்னையும் ஆண்டுகொண்(டு)

இன்னருள் புரியும் எம்பெரு மான்!பள்ளி எழுந்தரு ளாயே!

சென்ற திருப்பாட்டில் இறைவனை விளித்தது போன்றே, இன்னிசை வீணையர் யாழினர்’ எனத் தொடங்கும் இத்திருப்பாட்டிலும், மாணிக்கவாசகர் இறைவனைத் திருப்பெருந்துறை சிவபெருமானே என்றும், எம்பெருமானே என்றும் விளித்துள்ளார்.

அறிவிற் சிறந்த ஒளவை பிராட்டியார் அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்பார். அரியதாகிய