பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பூதங்கள் தோறும் கின்றாய்.

பூதங்கள் தோறுகின்

றாய்’ எனின் அல்லால் போக்கிலன் வரவிலன்’ எனங்னைப் புலவோர் கீதங்கள் பாடுதல்

ஆடுதல் அல்லால் கேட்டறி யோம் உனைக்

கண்டறிவாரைச் சீதங்கொள் வயல்திருப்

பெருந்துறை மன்னா! சிந்தனைக் கும்அரி

யாய்! எங்கண் முன்வந்(து) ஏதங்கள் அறுத்தெம்மை

ஆண்டருள் புரியும் எம்பெரு மான்! பள்ளி

எழுந்தரு ளாயே!

மாணிக்கவாசகப் பெருமான் திருப்பள்ளியெழுச் பியின் ஐந்தாம் திருப்பாடலைப் பூதங்கள்தோறும் நின்றாய்” என்று தொடங்குகின்றார். மேலைத் திருப் பாட்டில் இறைவனுக்குப் பணியாற்ற அடியவர்கள் இறைவன் வருகையை விருப்புடன் எதிர்நோக்கி நிற்றலை அறிவுறுத்திய திருவாதவூரடிகள், இறைவன் தன் கண்முன் வழுந்தருள வந்து தன் குற்றங் களைந்து தனக்கு அருள்