பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 திருவெம்பாவை விளக்கம்

புரிய வேண்டுமென்று விண்ணப்பிக்கு முகத்தான் அமை/ துள்ளது.

திருப்பெருந்துறை மன்னா’ என்றும், சிந்தனைக்கு அரியாய்” என்றும், எம்பெருமான்’ என்றும் தொடக கத்தில் இறைவனை விளித்தலைக் காணலாம். திருப் பெருந்துறை நீர்வளமும் அதன்வழி நிலவளமும் மிக்க து என உரைப்பாராய்ச் சீதங்கொள் வயல் திருப்பெரும் துறை மன்னா’ என்றார். நீர்பொருந்திய வயல்களா , சூழ்ந்த திருப்பெருந்துறைக்கரசே என்பதனால் பிறவிக்கு ஆட்பட்ட உயிர்களின் வெப்பம் நீக்கு வான் வேண்டி, அவன் குளிர்ச்சி நிறைந்த நிலங்களுக்கு அரசனாக இருக கிறான் என்பதனைக் குறிப்பால் உணர்த்தினார் எனலாம். அடுத்து, அன்பர்க்கு எளியவனாகவும், அல்லாதார்க்கு அரியவனாகவும் இருக்கிறான் என்பதனைப் புலப்படுத்த, ‘சிந்தனைக்கும் அரியாய்” என்றார். இங்ஙனம் ஏவை யோர்க்கு அரியவனாக இருந்தாலும் கருணை மிக கொண்டு எளியவந்த தோற்றங்கொண்டு தன்னை ஆ. கொள்ளும் திறமுடையோனாதலின் எம்பெருமான்’ என்று குறிப்பிட்டார்.

இறைவனை இவ்வாறு மூன்றுபெயர் தந்து அழைத்த பின்னர், அவனைக் காண்பதற்கு விருப்பம் மிகுதலால் அதனை அறிவிப்பார், பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கிலன் வரவிலனென நினைப்புலவோ கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோ உனைக் கண்டறிவாரை’ என்றார். பூதங்கள் தோறும் நின்றாய்” என்பதனால் ஐம்பெரும் பூதங்களாம் நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் என்பனவற்றுள் பொருள் கள் ஒவ்வொன்றிலும விளங்கும் தன்மை உணர்த்தப்

பட்டது. போக்கிலன் வரவிலன் என நினைப்புலவோ கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனை’ என்றார். இறைவனைப் போக்கும் வரவும்

புணர்வும் இலாப் புண்ணியனே’ என்று மாணிக்கவாசகமே