பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்டர் சி. பாலசுப்பிரமணியன் 129

விவபுராணத்தில் (77) இறைவனைக் குறிப்பிடுவர். பிறப் பிலார் இறப்பிலார்’ என்று அப்பர் பெருமானும் திருப் தணை நல்லூர்ப் பதிகத்தில் (8) கூறுவர். இவை வர்தம் வாய்மொழியாம் அருட்பாடல்கள் வழிதான் 1றைவனை அறிய முடியும் என்பதை உணர்த்தி நிற் ன்ெறன. ஈண்டுப் புலவர் என மணிவாசகப் பெருமானால் அறிக்கப் பெறுவோர் கேட்டுச் சிந்தித்து, தெளிந்து ரிட்டை கூடிய மெய்யுணர்வினை உடையோர் என்பர் சைவப் பெரு நூல்களை நன்குணர்ந்த பெரியோர். கீதம் ாண்டு இசையொடும் கூடிய பாடல்களைக் குறிப்பிடும். விசைப்பாட்டைப் பாடுதலேயன்றி ஆடுதலுங் செய்தார் என்பது உணர்த்தப்படுகின்றது. எனவே அடியவர்கள் அவ்வொரு பூதத்தினிடத்தும் விளங்குகின்றாய் என்பதும் அல்லாமல், இறப்பற்றவன். பிறப்பற்றவன் என்று பிசைப்பாடல்கள் பாடப்பெறுவதும் பேசப்பெறுவதும் அல்லாமல் உன்னை அனுபவித்து உணர்ந்தவர்களை நாங்கள் கேள்விப்படவில்லை. எங்கள் கண்கள் காணு ாறு எங்கள் முன் திருவுருக்கொண்டு தோன்றி, எங்கள் குற்றங்களைக் களைந்து, எங்களை அடிமை கொண்டு அருள் புரிவீர்களாக, எனவே இறைவனாகிய நீங்கள் பள்ளியெழுந்தருள வேண்டும் என்று வேண்டுகின்றார்கள்.

இத்திருப்பாட்டில் முன் திருப்பாடல்களிற் காணப் பட்ட இயற்கை வருணனைகள் இல்லை. ஆயினும் தங்கள் மனத்தே மண்டி கிடக்கும் மும்மலங்களை அகற்றித் தம்மை அடிமை கொண்டு ஆட்கொண்டருள வேண்டும் என்று அடியவர்கள் ஆண்டவனை வேண்டிக் கொண்டனர். ரிவஞானத்தில் திளைத்து இன்புற வேண்டும் என்று உலக பயிர்கள் விரும்பின என்பது இப்பாட்டால் அறியப்பெறு ன்ெறது.

இத்திருப்பாட்டின் தனிச்சிறப்பியல்புகள் ஆழ்ந்து நோக்கத்தக்கன. முதலாவதாக இறைவன் ஐம்பூதங்கள்