பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

覆30 திருவெம்பாவை விளக்கம்

அனைத்திலும் நிறைந்து நிற்பவன் என்னும் கருத்துப் பெறப்பட்டது. அவனுக்கு இறப்பு இல்லை; பிறப்பும் இல்லை. சிட்டுக்குருவிக்கும் சிவபெருமானுக்கும் சிலேை அமைய ஒரு புலவர் இடைக்காலத்தில் தனிப்பாடல் ஒன்று பாடினார். பிறப்பிறப்பில்’ என்றார். சிட்டுக்குருவி யைக் குறிப்பிடும்பொழுது, அச்சிட்டுக்குருவியின் பிறப்பு இறவாணத்தில் என்று பொருள்படும். சிவபெருமானோடு கொண்டு கூட்டும்பொழுது பிறப்பு இறப்பு இல் அதாவது பிறப்பு இறப்பு இல்லை என்றார். நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் இயற்றியருளிய குடவாயிற் கோட்டத்து அரச துறந்திருந்த இளங்கோவடிகள், சிவபெருமானைப் * பிறவா யாக்கைப் பெரியோன்’ என்றார். மணிவாசகரும் திருவெம்பாவையின் முதற்பாட்டினையே “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி’ எனத் தொடங் கினார். போக்கும் வரவும் அற்ற புண்ணியன்’ என்று சிவபெருமானைக் குறிப்பிடுவதற்குக் காரணம் அவன் இறப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை; இத்தகைய பண்பாளனைப் புலவர்கள் இசைப் பாடல்களை முழக்கிக் கொண்டே இன்ப மயக்கத்தில் ஆடவும் செய்கின்றனர். இவ்வாறு இறைவன் புகழைப் பாடினார்களேயல்லாமல் அவனைக் கண்டவர்கள் இல்லை; கேட்டறிந்தவர்கள் இல்லை. இறைவனைக் கண்டும் கேட்டும் உணர்ந்த வரி களைக் கண்டறிந்தவர்கள் இல்லை. ஆனாலும் சிவ பெருமான் தம் கண்முன் வந்து தோன்ற வேண்டும் என அறிவார்ந்த அடியவர்கள் விரும்புகின்றனர். எனவே கீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா’ என்றும், *சிந்தனைக்கும் அரியாய்” என்றும் கூறி எம்பெருமானே நீ எங்கள் கண் முன் வந்து நிற்க வேண்டும்; அவ்வாறு நிற்பதோடு அல்லாமல் ஏதங்கள் அறுத்து எம்மை ஆண்டருள்புரியும்’ என்கின்றனர். உலக உயிர்கள் குறை வுடையனவாகும். அக்குறைகள் ஆணவம், கன்மம், மாயை என்பனவாகும். அவற்றை மும்மலங்கள் என்பரி