பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் - 135

கொளுத்தப்பட்டு உடலுறுப்புகளால் இறைவனை வழி படற்கு இயலும் என்க. அப்பொழுதுதான் பாசக்

கட்டறுதல் என்பதும் நேரும்.

‘மைப்புறு கண்ணியர் மானுடத்தியல் பின் வணங்கு கின்றார்’ என்னும் தொடர் மையின் தன்மை சூழப் பொருந்திய கண்களுடைய குல மகளிரும் அறிவுடைமைக்கு அறிகுறியாகும் சிறப்பினால் சிவனைப் பணிகின்றார்கள்

என்னும் பொருள் கொள்ளும்.

‘‘மைப்பயந்த வொண்கண் மடநல்லார் மாமயிலை எனும் திருஞான சம்பந்தர் திருமயிலாப்பூர்த் தேவாரம் (2) மையினைப் பூசுதல் மகளிர் வழக்கு என்பதனை உணர்த்தும். அடியார் பலரும், பாசத்தினை அறுத்தவர் பலரும், கண்ணியர் பலருமாகச் சிவனை வழிபடல் மேற்கொள்ளுகின்றனர் என்பதனை மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார்.

இறைவனை வணங்குவதென்பதே மானுடத் தன்மை களுள் ஒன்று என்று புலப்பட மானுடத் தன்மையின் வணங்குகின்றார் என்பர். கோளிற் பொறியிற் குண மிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை: என்று திருக்குறளும் இதனை உணர்த்தும். இறைவன் உடலுறுப்புகளைப் படைத்திருப்பதே அவ்வுறுப்புகளைக் கொண்டு அவனை வணங்குவதற்கே என்பர். தலையே நீ வணங்காய்’ என்ற தேவாரத் திருப்பட்டாலும் இவ் வுண்மையை உணரலாம். கற்றதனால் ஆய பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழஅர் எனின் என்ற குறளும் கடவுளை வணங்குதலே கற்றதன் சிறப்பாக அமையும் என்பர். மனிதர் அறிவுடையோர் எனக் கருதப் படவேண்டுமானால், அவர்கள் தீயன சிறிதும் நெஞ்சில் கருதாமலிருக்கவேண்டும் என்பர்.

‘செப்புறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப் பெருந்துறையுறை சிவபெருமானே’ என்று இறைவனைக்