பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 திருவெம்பாவை விளக்கம்

குறிப்பிட்டு எமை ஆண்டு இப்பிறப்பு அறுத்து அருள் புரியும்’ என வேண்டுகின்றார்.

எங்களை அடிமை கொண்டு, நாங்கள் பெற்றிருக்கும் இப்பிறவியினை யொழித்து எங்கட்கு அருள் புரிவீராக என்று விண்ணப்பித்து, இறுதியாக எம்பெருமான் பள்ளி யெழுந்தருளாயே என்கின்றார்.

தம்மை அடிமை கொண்டு, பிறவி வேரை அறுத்து, புவியில் மீண்டும் பிறவாமற் காத்து அருள வேண்டும் என்பதனைபே இத்திருப்பாடல் உணர்த்துகின்றது.

பப்பற வீட்டிருந்து

உணரும் கின் அடியார் பந்தனை வந்தறுத்

தார்.அவர் பலரும் மைப்புறு கண்ணியர்

மானுடத் தியல்பின் வணங்குகின் றார், அணங். கின்மண வாளா ! செப்புறு கமலங்கண்

மலரும்தண் வயல்சூழ் திருப்பெருங் துறையுறை

சிவபெரு மானே ! இப்பிறப் பறுத்தெமை

ஆண்டருள் புரியும் எம்பெரு மான் !பள்ளி எழுந்தரு ளாயே !