பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கடl . பாலசுப்பிரமணியன் 13

மொழியாலேயே தானும் புகழ முற்படுகின்றாள். எனவே, நேரிழையிர்’ என்கின்றாள். பொருத்தமான அணிகலன் களைப் புனைந்து கோல எழிலுடன் அழகு குலுங்கி மிற்கும் நங்கையரே என்று கூறிவிட்டால், அப்புகழ் மொழியில் அதுவும் அவர்களே சற்று முன் அவளைப் தேர்ந்தெடுத்த புகழ்மொழியில் சொக்கி كل الما ، / ا ம்ெபான்றோ? அவ்வளவில் தன் மறுப்புக் கருத்தினைச் சொல்லிவிடும் வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்கிறாள் அவள் .

ச்ேசி! உங்கள் வாயில் இங்ஙனம் ஏசும் சொற்களும் சில உள்ளனவோ?’ என்று தன் வியப்பை வெளிப்படுத்து கின்ற ன், உறக்கத்தினின்றும் கண் மலர்ந்த பெண் . அனெனில் அவர்கள்-அதிலும் அவளை நன்கு முற்றிலு மா அறிந்தவர்கள்-அவர்கள் வாயினின்றும் அத்தகைய சுடுசொற்களை அவள் எதிர்பார்க்கவில்லை என்பது இவையும் சிலவோ ! என்பதனால் முதற்கண் புலப் படுகின்றது. அடுத்தபடியாக விளையாடி ஏசும் இடம் ஈதோ?’ என்றும் கேட்டு விடுகின்றாள். விளையாட்டாகப் பழித்துரைத் தற்கு உரிய காலமும் இடமும் இதுவாகுமோ என அவள் கூறுவது சற்றே சிந்திக்கத்தக்கது.

தருமன் சூதாட்டத்தில் சகுனியிடம் ஐவருக்கும் உரிமை பூண்ட தேவியாம் பாஞ்சாலியை சூதுப் பொருளாக வைத்திழந்தான். பாஞ்சாலியை சூதிலே பெய், அரவக் கொடியுயர்த்த கெளரவர் தலைவன் துரியோதனன் அவளை மானபங்கப்படுத்த முற்பட்டான். அப்பொழுது வீமன் தன் தம்பி அருச்சுனனைப் பார்த்துச் சொன்னான்: தம்பி, எரிதழல் கொண்டு வா; கதிரை வைத்திழந்தான்; அண்ணன் கையை எரித்திடுவோம்’ என்றான். அப்பொழுது அருச்சுனன் சொன்னான்: “ ம ன மார ச் சொன்னாயா «Yf LD fT ! யாரிடத்துச் சொன்னாய்? எங்கு சொன்னாய்?’ என்றான் என்பதாகப் “பாஞ்சாலி சபதத்தில் மகாகவி பாரதி பாடுவான்.