பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 திருவெம்பாவை விளக்கம்

கின்றனர். பொருத்தமான அணிகலன்களைப் புனைந் திருக்கின்ற பெண்ணே எனும் பொருளில் நேரிழையாய்” என விளிக்கின்றனர். அவ்வாறு விளித்துப் பின்னர்த் தாம் சொல்ல வந்த கருத்தினைச் சொல்ல முற்படு கின்றனர். உறங்குகின்ற அப்பெண் எழுப்ப வந்த பெண்களோடு நெருங்கிய நேயமும் தொடர்பும் பூண்டிருந் தாள் என்பது இராப்பகல் நாம் பேசும்பொழுது எப்போதும்’ என்ற தொடரால் பெறப்படுகின்றது.

பெண்கள் இருவர் பேசத் தொடங்கினால் அப்பேச்சு கால தேச வர்த்தமானங்களுக்குக் கட்டுப்படுமோ? அதுவும் அப்பேச்சு எல்லாம் வல்ல அப்பரம்பொருளைப் பற்றியதாக இருக்கையில் அது பகலென்றும் இரவென்றும் பாராது நீளுமன்றோ? அவ்வகையில்தான் உறங்குகின்ற அந்தப் பெண் இராப் பகலாகப் பேசிய பல நாட்களிலும் அவளுடைய பாசம் பேரன்பு பரஞ்சோதிக்கு என்றே மொழிந்தாள். ஒளி வடிவாகத் திகழும் உத்தமனான சிவபிரானுக்கே தன் அன்பைக் காணிக்கையாக்கி விட்டேன் என்று அவள் கட்டுரைத்த நாட்கள் பல. ஆனால் இவ்வாறெல்லாம் உறுதியாகவும் அறுதியிட்டும் பேசிய அவள் இன்று மலர்கள் நிறைந்த படுக்கை யினிடத்தே பாசத்தை மாற்றி வைத்துக் கொண்டவள் போலத் தென்படுகின்றாள். ஏனெனில் மலர்ப் படுக்கை யினின்றும் எழுந்துவர மனமில்லாமல் அப்படுக்கையிலேயே ஆசையை வைத்தவள் போல உறங்கிக் கொண்டு கிடக்கின்றாளே என்று எழுப்ப வந்திருக்கும் மகளிர் உறங்கும் பெண்ணை நோக்கி உரைக்கின்றனர். ஏன்? சற்றுக் கேலியுடனேயே கேட்டுவிட்டனர். அவர்கள் பேச்சில் எள்ளல் குறிப்பிருந்தது. அவ்வாறு ஏசிய அளவில், உறக்கங் கலைந்து ஒரு வாறு எழ முற்படுகின்ற பெண், எழுப்புவர்கள்மீது சீறி விழாமல், சினவாமல், பொறுமை யாக மறுமொழி தருகின்றாள். அவர்கள் சினத்தைத் தணிவிப்பவள் போல-அவர்கள் தன்னைப் புகழ்ந்துரைத்த