பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பாசம் பரஞ்சோதி

பாசம் பரஞ்சோதிக்

கென்பாய் இராப்பகல் நாம் பேசும்போ:தெப்போதிப்

போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ?

நேரிழையாய்! நேரிழையீர்! சீசி! இவையுஞ்

சிலவோ? விளையாடி ஏசும் இடமீதோ?

விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதங்

தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன்

தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க் கன்பார்? யாம்

ஆரேலோர் எம்பாவாய்!

பாசம் பரஞ்சோதிக்கு என்று தொடங்குகின்றது. இவ்விரண்டாம் பாட்டு. முதற்பாட்டில் ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்சோதி என மணிவாசகப் பெருந் த கையார் சிவ பரம்பொருளை வழுத்தினார். இத்திருப் பாட்டில் பரஞ்சோதி என்று அப்பரம்பொருளைச் சுட்டுகின்றார். முன் பாடல் போலவே பெண்டிர் தமக்குள் அமையும் உரையாடலாகவே இப்பாடலும் அமைந்துள்ளது.

உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணொருத்தியை எழுப்புவதற்குச் செல்லும் மகளிர் அவளைப் புகழ்வது போல முன்னிலைப்படுத்தியே தம் பேச்சைத் தொடங்கு