பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 திருவெம்பாவை விளக்கம்

தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே’ என விளித்தார்.

  • குறவரும் ஏற அஞ்சும் மலை’ என்பது போல ‘விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா என்பதிலுள்ள உம்மை சிறப்பும்மையாகும். உயர்ந்த வானுலகங்களில் வாழும் தேவர்களாலும் நெருங்கவும் முடியாத மிகச் சிறந்த பொருளாய் விழுப்பொருளாய் இருப்பவன் சிவ பெருமான் என்னும் கருத்து இதனால் அறிவுறுத்தப் பட்டது. நண்ணவும் என்று கூறியவதனால் நெருங்கவும் மாட்டாத-அடையவும் மாட்டாதவர் என்பது பெறப் பட்டது. இவ்வாறு வானுலகில் வாழும் தேவர்களுக்கு நெருங்கவும் முடியாத-அடையவும் மாட்டாத ஒரு சிறந்த அரிய உயர்ந்த பொருள், இம்மண்ணுலகில் வாழும் தொண்டர்களுக்கு எளிமையாக அருளின் காரணமாக வெளிப்பட்டு அவர்களைப் பேரின்பத்தில்-சிவானந்தானு பவத்தில் திளைக்கச் செய்யும் தன்மையுடையதாகும் என்று குறிப்பிடுவார் உனதொழுப்படி யோங்கண் மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே’ என்றார். இவ்வாறு மண்ணுலகத்தில் வந்து பிறவியெடுத்தல் என்பது சிவபெருமானது விருப்பின் காரணமாக நடைபெறுவ தல்லது உலக உயிர்களின் இச்சை காரணமாக நிகழ்வ தன்று.

வான்பழித்து மண்புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல்’’ என்ற திருவாசகத் தொடர் இக்கருத்தினைத் தெளிவுறுத்தும்.

  • வண்திருப் பெருந்துறையாய்” என்று மீண்டும் சிவ பெருமானை உளங்கசிய அழைத்துருகும் குறிப்பு, அவன் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள திருப்பெருந் துறை நிலவளமும் நீர்வளமும் பெற்றிருப்பதோடன்றி உலக உயிர்கள் அருள் பெற வைக்கும் திருத்தலமாகவும் திகழ்கின்றது என்னும் கருத்தினை விளக்க வந்தது. திருக்