பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 திருவெம்பாவை விளக்கம்

என்று அருணந்தி சிவாச்சாரியார் சிவஞான சித்தியாரில் (182) செப்பியுள்ளவை இக்கருத்தை வலியுறுத்தக் காணலாம். இந்த மானிடப் பிறவி வாய்த்ததே ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி அவனடி சேர்ந்து மாறா இன்பத்தில் திளைப்பதற்கேயாம்.

பெறுதற்கரிய மானிடப் பிறவியினைப் பெற்றும், நாள்தோறும் சிவனை நினைத்து வழிபடாத நாட்கள் வீழ் நாட்களாகும்.

வீழ்நாள் படாமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல்

என்பார் திருவள்ளுவர். (38) சிவபெருமானுடைய புகழைப் புகழ்ந்து பேசாத நாட்களெல்லாம் பிறவா நாட்கள் என்னும் கருத்தில் தாண்டக வேந்தராம் திருநாவுக்கரசர் பெருமான்,

பிறந்தேன்கின் திருவருளாலே பேசின் அல்லால் பேசாத நாளெல்லாம் பிறவா நாளே

-திருவாவடுதுறை, திருத்தாண்டகம்: 101

என்றும்,

துன்பம் நூம்மைத் தொழாத நாட்கள் என்பாரும் இன்பம் நும்மை ஏத்து நாட்கள் என்பாரும்

-திருவாரூர்: 9 என்றும் கூறியுள்ளமை கொண்டு தெளியலாம்.

தங்கள் வாழ்நாட்கள் வீழ்நாட்கள் ஆகாதிருக்கத் திருமாலும் நான்முகனாம் பிரமனும் இந்தப் பூமியை விரும்பினார்கள் என்பார் திருமாலாம் அவன் விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்படவும்’ என்றார். திருமால் விருப்பப்பட்டார்; பிரம்மன் ஆசைப்பட்டார் என இரண்டு வினையான் சொல்லியிருப்பதில் ஒரு நயம் உண்டு. விருப்பம் வேறு ஆசை வேறு. விருப்பம் உயர்ந்த