பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.டாக்யர் சி. பாலசுப்பிரமணியன் 155

பொருளிலும்; ஆசை அதனினும் சற்றுத் தாழ்ந்த பொருளிலும், வரும். எனவே திருமால் கொண்டது விருப்பம் என்றும், பிரமன் கொண்டது ஆசை என்றும் அறிவுறுத்தினார். இவ்வாறு தேவர்களாலும் விரும்பப் படும் இவ்வுலகத்தில் நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் அவனியிற் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய்” என்றார். நினது பரந்து விரிந்த பொய்யாத அருட் காட்சியாக விளங்கும் அருட்சத்தியும் தேவரீராகிய நீரும் இவ்வுலகின் கண்ணே போந்தருளி எங்களை அடிமை கொள்ள வல்லவனே என்பது இத்தொடரின் பொரு வாாகும். ஈண்டு அலர்தல்” என்னும் சொல் உயிர்கள் தோறும் மறைந்து நின்று இறைவன் அவ்வுயிர்களை வினைப்பயன் நுகருமாறு செய்தும் மனப்பக்குவமும் செய்து வந்த திரோதான சத்தி அருட்சத்தியாக வெளிப் படும் திறத்தினை உணர்த்தி நின்றது. உலகில் வாழும் எந்த உயிரின் கருணையும் அளவும் காலமும் கருதிய தாகலாம். எந்த வுயிரின் ஆற்றலுக்கும் அருளுக்கும் ஒர் எல்லை உண்டு. ஆனால் சிவபெருமான் வரம்பற்ற

ஆற்றல் உடையவன். திருபுரத்தையே எரித்தவன். அவ்வாறு வரம்பற்ற ஆற்றல் கொண்டிருத்தல் போலவே அளவற்ற அருளையும் கொண்டவனாய் உள்ளான்,

அதனால்தான் பிறரைச் சாகச் செய்யும் கடு நஞ்சைத் தானே உண்டு, தேவர்களையும் பிறரையும் சாவிலிருந்து காப்பாற்றினான். எனவே அவனது திருவருள் என்றும் பொய்யாத தன்மை கருதி மெய்க்கருணை’ என்றார் மாணிக்கவாசகர். எனவே இவ்வுலக உயிர்களுக்கு அருள் செய்வான் வேண்டி, இவ்வுலகத்தே உமையம்மையோடும் வந்து போந்த சிவபெருமான் உயிர்கள் அனைத்தையும் அடிமை கொள்ளும் ஆற்றல் மிக்க வன் என்பது தோன்ற எமை ஆட்கொள்ள வல்லாய்” என்றார். யான் விரும்புவ தெல்லாம்-நின்பால் வேண்டுவதெல்லாம் எங்களை ஆட்கொள்ள வேண்டும் என்பதே என்பதைக் குறிப்பிட்டு,