பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டரி சி. பாலசுப்பிரமணியன் 15.

என்ற மணிவாசகரே திருச்சதகத்தில் கூறியிருப்பது போல, தேவர்களே தங்கள் வாழ்வு உயரத் தேவ தேவனாகிய சிவபெருமானைத் துதித்து நிற்கும்பொழுது, எளிமைக்கு இரங்கி அருள்வந்து ஆட்செய்யும் அப் பெருமான் நம் அன்பை ஏற்று அவன் தன் அடியாராகக் கொள்வர் என்பது இப்பாட்டால் அறியப் பெறுகின்றது.

ஈசனார்க்கு அன்பர்யாம் ஏலோர் எம்பாவாய்’ என முடியும் இத்திருப்பாடலில் கன்னியரின் கன்றிய உள்ளமும் வென்பால் ஒன்றிய சிந்தையும் புலப்படக் காணலாம்.

பாசம் பரஞ்சோதிக்

கென்பாய் இராப்பகல் நாம்

பேசும்போ தெப்போதிப்

போதார் அமளிக்கே

நேசமும் வைத்தனையோ?

நேரிழையாய்! நேரிழையீர்!

சீசி! இவையுஞ்

சிலவோ? விளையாடி

ஏசும் இடமீதோ?

விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதங்

தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன்

தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க் கன்பார்? யாம்

ஆரேலோர் எம்பாவாய்!