பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. முத்தன்ன வெண்ணகையாய்

முத்தன்ன வெண் ணகையாய்!

முன்வங் தெதிர் எழுந்தென் அத்தன் ஆனந்தன்

அமுதன் என் றள்ளுறித் தித்திக்கப் பேசுவாய்

வந்துன் கடைதிறவாய்! பத்துடையீர்! ஈசன்

பழ வடியிர்! பாங்குடையீர்! புத்தடியோம் புன்மை தீர்த்

தாட்கொண்டாற் பொல்லாதோ? எத்தோ?கின் அன்புடைமை

எல்லோம் அறியோமோ. சித்தம் அழகியார்

பாடாரோ? நம் சிவனை இத்தனையும் வேண்டும்

எமக்கேலோர் எம்பாவாய்!

இரண்டாம் திருப்பாட்டில் சிவபெருமான் பாசம் பரஞ்சோதிக்கென நேய மனத்தோடு வாழும் நேரிழை யாருக்கு, எளிவந்த பிரானாய் அருளும் மாண்பினை அழகுடன் அறிவுறுத்திய மணிவாசகப் பெருந்தகையார், இத்திருப்பாட்டில் அவ்வடியவராய் நேரிழையாரின் புன்மையைப் போக்கி, அவர்களை ஆட்கொள்ளும் அருஞ்சிறப்பினைப் புலப்படுத்துகின்றார். இப்பாடலின் தொடக்கமே முத்தன்ன வெண்ணகையாய் என முன் னிலை மொழியில் - உறங்கி நிற்கும் மகளிரின் இன்முகத் தினையும். குளிர்ந்த நன்மொழிகளையும் குறிப்பிடும் போக்கில் முத்தன்ன வெண்ணகையாய் என்று அமை

.கின்றது.