பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. டl சி. பாலசுப்பிரமணியன் 19

அசன்பால் பற்றுடையவர்களே! வழிவழி அவ விட க்து அடிமைத்திறம் பூண்டு அமைந்து வாழும் பெண் டி.ர்களே ! கடவுளிடத்து மாறாத - நிலைத்த பண்பினையுடையவர்களே! புதுவதாக அடிமை பூண்ட வங்களிடத்துள்ள கீழ்மைக் குணங்களை அகற்றி, எங்க ளையும் ஏற்று ஆண்டு கொள்ளுதல் வழுவாகுமா?’’ வான்று வெளியில் வந்த கன்னியர் இன்முகத்தோடு | யமுடன் கேட்கின்றனர். இவை கேட்டலும், எழுப்ப வந்த கன்னியர்கள் உன் அன்புடைமை வஞ்சகமாகுமோ? ஆகா கன்றோ! அதனை நாங்கள் எல்லோரும் நன்கறி

வோம், நமது சிவபெருமானைத் துtய மனமுடையார் அனைவரும் இவ்வைகறைப் போதில் காதலாகிக் கசிந்து அண்ண மல்கப் பாடி உருகுவது இயல்பல்லவா? எங்க

ளிடத்தில் நீங்கள் மேலும் மேலும் பலபடியாக அடுக்கிக் கூறவும் வேண்டுமோ? வேண்டுவதில்லை’ என்றார்கள்.

வீட்டின் உள்ளிருந்து புறம் போந்த கன்னியர்தம் பேச்சினை முதற்கண் நோக்குதல் வேண்டும். அதற்கும் மேலாக, அவர்களுக்கு மறுமொழியாக வெளியே இருந்து பேசுபவர்கள் பேச்சினைச் சற்று ஆழ்ந்து நோக்க வேண்டும். எத்தோ நின் அன்புடைமை : எல்லாம் அறியோமோ? சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை எமக்கு இத்தனையும் வேண்டுமோ எனும் மொழிகளை மாணிக்க அடிகள் எனலாம். ‘சித்தம் அபு கியார் பாடாரோ நம் சிவனை’ எனும் மணிவாசகத் தோடு நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினை யாது ஒரு பொழுதும் இருந்தறியேன்” என்னும் திருநாவுக் கurசரின் திருவதிகை வீரட்டானப் பதிகத் தொடர்களை இயைபுபடுத்திக் காணும்போது கழிபேருவகை ஏற்படு கின்றது. பத்து’ என்று இப்பாட்டில் வரும் சொல்லினைப் பற்று’ எனக் கொள்ளாது, பத்து’ என்றே கொண்டால் பத்துகொலாம் அடியார் செய்கை தானே’’ எனும் அப்பர் பெருமான் அருண்மொழிவழி உணரப்படுவது