பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T8 - திருவெம்பாவை விளக்கம்

.பாதுகாப்பிலும், வயது முதிர்ந்து பேரிளம் பெண்ணாய்த் திகழ்கின்ற நிலையில் இறைவனின் அருளாட்சி நோக்கியும் விளங்குகின்றனர் என்பது தெளிவு. அத்தன்” என்றால் தந்தை” . அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்’ என்பது திருநாவுக்கரசர் திருமொழி. அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே என்பது சுந்தரர் திருப்பாட்டுத் தொடர். எனவே கன்னிப் பருவத்தில் பாசத்தோடும் பண்போடும் வளர்க்கும் தந்தையாக இறைவன் திகழ்கிறான். ஆனந்தன்” என்றால் மகிழ்ச் சியைத் தருபவன் என்றாகும். அதுவே காதலன் நிலை. அந்நிலையில் நாயகன் - நாயகி பாவ நிலையிலும் இறைவன் விளங்குகின்றான். மூன்றாவது நிலை அமுதன்’ என்பதாகும். அமுதாக அனைத்துயிர்க்கும் விளங்குபவன் ஈசனாவான். எந்தை ஈசன் எம்பெருமான்’ என்று பாடுவார் திருஞானசம்பந்தர். எவ்வுயிர்க்குத் தலைவ னாய், எவ்வுயிரினையும் காப்பவனாய், காத்து அருள் செய்பவனாய் ஈசன் திகழ்கின்றான்.

எனவே கன்னியர் அச்சிவ பரம்பொருளை அத்தன், ஆனந்தன், அமுதன் என்றனர். தந்தையாய், இன்புரு வினனாய், சாவா மருந்தினனாய் விளங்கும் சிவனை அனுபவித்து அனுபவித்து வாய் தித்திக்கத் தித்திக்கப் பேசுவர் கன்னியர். அள்ளுறித் தித்திக்கப் பேசுவாய்” என்பது மணிவாசகம். இத்தகு பெண்களே! நீங்கள் வந்து உங்கள் தலைவாசலைச் சற்றுத் திறவுங்கள் என்று வீதி யிலே நிற்கும் பெண்கள் கேட்டுக் கொள்கிறார்கள். வீதி யில் வந்து நின்ற கன்னியர் இவ்வாறு வீட்டினுள்ளிருக்கும் கன்னியரை விளித்த அளவில், அவர்களும் தங்கள் தங்கள் வாயிற்கதவுகளைத் திறந்து வெளிப் போந்து, வாயிற் புறத்து வந்து நிற்கும் கன்னியரை நோக்கி ஆர்வமுடன் அன்புடையீர், ஈசன் பழ அடியிர்! பாங்குடையீர்! புத்த டியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல் லாதோ’’ எனக் கேட்கின்றனர்.