பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஒண்ணித்தில நகையாய்

ஒண்ணித் திலங்கையாய்!

இன்னம் புலர்ந்தின்றோ? வண்ணக் கிளிமொழியார்

எல்லாரும் வந்தாரோ? எண்ணிக்கொ டுள்ள வா

சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே

காலத்தைப் போக்காதே! விண்ணுக் கொருமருங்தை

வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப்

பாடிக் கசிந்துள்ளம் உள்ருெக்கு கின்றுருக

யாம்மாட்டோம் நீயேவந்து எண்ணிக் குறையில்

துயிலேலோர் எம்பாவாய்!

‘முத்தன்ன வெண்ணகையாய் என்று தொடங்கும் முன்றாவது திருப்பாட்டில் சிவபெருமானது பழ வடிய வயாகிய கன்னியர், புத்தடியார்களாகிய கன்னியரது. பன்மை தீர்த்தாட்கொள்ளும் சிறப்பினை உணர்த்திய மாணிக்கவாசகப் பெருமான், ஒண் நித்தில நகையாய்: எனத் தொடங்கும் இத்திருப்பாட்டில் வாழ்நாள் வீழ்நாள் ஆகாது, மருந்தாகவும், வைப்பு நிதியாகவும் எல்லார்க்கும் இனியனாகவும் விளங்கும் சிவபிரானைப் பாடிப் பரவி உய்யுநெறி எய்துமின் என அறிவுறுத்தும் போக்கில் அமைந்திருக்கின்றது.

2