பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 திருவெம்பாவை விளக்கம்

இத்திருப்பாடலும் உறங்கிக் கொண்டிருக்கும் கன்னி யரை உளங்கொள மகிழ்வித்துப் புகழ்ந்து பேசித் தொடங்கும் போக்கிலேயே அமைந்திருக்கக் காணலாம். ஒளிவிடுகின்ற முத்தினையொத்த பற்களையுடைய பெண்ணே என்பதுதான் ஒள் நித்தில நகையாய் என

விளி கொண்டுள்ளது.

இவ்வாறு துரங்கும் தோழியரைத் துயிலெழுப்ப வந்த கன்னியர் அவர்களை முன்னிலைப்படுத்தித் தாம் கூறவந்த செய்தியினை உரைக்க முற்பட்டனர். * இன்னும் பொழுது விடியவில்லையா?’ என்றதை அடுத்து சுடுசொல் வெளியில் வாயிற்படியில் வந்து நிற்கும் கன்னியர் வாயி னின்றும் பிறக்கின்றது. இன்னம் புலர்ந்தின்றோ?’ இவ் ஏச்சுரை கேட்ட அளவில், படுக்கையிலிருந்து எழவும் மனம் இல்லாமல் துரங்கவும் ஒல்லாமல் கிடந்த கன்னியர், அழகுடைய கிளி போன்று கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் கன்னியர் எல்லாரும் வந்து சேர்ந்து விட்டனரா? எனக் கேட்கின்றனர். வண்ணக்கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ?’ என்பது மணிவாசகம்.

சிறந்த சொற்களைச் சிறந்த இடத்திற்பெய்து, சிறந்த முறையில் அடுக்குவது சிறந்த கவிதை (Putting best words in the best place in the best order) argårl off மேனாட்டறிஞர். அக்கூற்றிற்கு எடுத்துக்காட்டாக வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ?’’ எனும் தொடர் அமைந்துள்ளது. ஒண் நித்தில நகை யாய்” என்று பாடல் தொடங்கி, வண்ணக் கிளி மொழி யார்’ என்று மேலும் அடுக்கப் பெறும்பொழுது சொல் லாட்சிச் சிறப்பிற் சொக்கி நிற்க வைக்கிறது. மேலும் * இன்னம் புலர்ந்தின்றோ?’ என்ற தொடரும் உன்னி நோக்க வேண்டியுளது. இன்னம்’ என்ற சொல் * இன்னமும்’ என்ற கருத்தில் வந்தது. இன்னமும் என்ற சொல்லில் இடம்பெறும் உம்மை-இன்னமும் கூடவா நீவிர் எழுந்திருக்கவில்லை என்பதைச் சுட்டி நின்றது.