பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 23

பொழுது புலர்ந்ததும் தெரியாமல் இவ்வாறு உறங்கு தலும் ஒல்லுமோ எனக் கேள்வி கேட்பார் போலவும், அக்கேள்வியிலேயே தங்கள் சினக் குறிப்பை, ஏச்சுரை. யினை எடுத்துரைப்பார் போலவும் அமைந்துள்ள திறம் வியக்கத்தக்கது.

மேலும் எல்லாரும் என்பதனால் முன்னரே தோழிகள் இது பற்றிக் கலந்து பேசி இத்துணை பேர் நாளை வைகறைப் போதில் எழுந்து நீராட வர வேண்டும் என்று ஒரு எண்ணிக்கை குறித்த செய்தி புலனாகின்றது. உறக் கத்திலிருந்தும் உடனே விழிக்காமல், விழிக்க மன மில்லாமல், எழவும் முடியாமல், பொய்யுறக்கங்கொண்டு இவ்வினாவினை உள்ளே இருப்பவள் கேட்கிறாளேயன்றி, விடை வேண்டும் வேண வாக் கொண்டு கேட்கவில்லை என்பது எழுப்ப வந்திருக்கும் மகளிருக்கு எட்டுகின்றது.

ஏதோ வினா விடுத்துக் காலத்தைக் கழிக்க முற்படு கிறாள் இவள் என்பதனை வீட்டிற்கு வெளியில் வீதியில் உள்ளவர்கள் நினைத்து ஒரு முடிவுக்கு வந்து விடுகிறார் கள். எனவே உடனே அவர்கள் வந்திருக்கும் எல்லாரை யும் கணக்கெடுத்து உள்ளவாறு பின்னர்த் தெரிவிப்போம். நாங்கள் அவ்வாறு அறிவிக்கும் வரையிலும் கண்களை முடித் திருவனந்தல் கொண்டு காலத்தை வறிதே கழிக் காதே என்று கழறினர். எண்ணிக் கொடு உள்ளவா சொல்லுகோம். அவ்வளவும் கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே’ என்று கடிந்துரைக்கின்றனர். தவமாக நினைக்கவேண்டிய காலம் அவமாகப் போக லாமா? இம்மார்கழி நீராட்டினைச் சங்க இலக்கியம் தைந்நீராட்டு’ என்றது. கற்றறிந்தார் ஏத்தும் கலித் தொகை, தை நீராடிய தவம் தலைப்படுவாயோ பrவாய்’ என்று பேசிற்று.

சிவ சிந்தனையோடு இருக்க வேண்டிய வேளையில் துங்கிக் கழிப்பது எற்றுக்கு என ஏசுகின்றனர் அழைக்க