பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 திருவெம்பாவை விளக்கம்

வந்திருக்கும் கன்னியர். உள்ளிருப்பவள் அவமே நேரம் கழிக்கலாம். தாங்கள் அவ்வாறு அவளை விட்டு விடுதல், தகுமா? தவமாய சிவத்தை நினைத்தல் வேண்டும். அன்றோ? செம்மையே ஆய சிவபதம் அருளிய செல்வமே சிவபெருமானே’’ என்றன்றோ ஆளுடைய அரசு புகன்று,

இம்மையே உனைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கெழுந் தருளுவதினியே’’ என்றார். எனவே கன்னியர் விண்ணு லகத்துத் தேவர்க்கெல்லாம் ஒரு மருந்து போல். விளங்குகின்றவனை, மறைகளுக்கெல்லாம் மேலான பொருளாய் விளங்குகின்றவனை, காண்பவர் கண்களுக் கெல்லாம் இனிமை பயக்கின்றவனை, சிவபெருமானைப் பாடிக் கசிந்து உள்ளம் நெ க்கு நெக்காய் உருகி நிற்க வேண்டும்-அதுவே இப்போது செய்யத் தக்க செயல் என்கின்றனர் புறம் நிற்கின்ற கன்னியர்.

விண்ணுக்கொரு மருந்தை, வேத விழுப்பொருளை, கண்ணுக்கினியானை’’ என்று அவர்கள் சிவ பரம் பொருளை வழுத்தும் அழகை நோக்க வேண்டும். மருந்தவன் வானவர் தானவர்க்கும்’ என்று திருவிடை மருதுரருறை ஈசனைத் திருஞானசம்பந்தர் கிளத்திக் கூறுவர். பிறவி என்னும் பெரு நோய்க்கு ஒப்பற்ற உயர் மருந்து இறைவனே ஆவன். பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேராதார்’ என்பார் திருவள்ளுவர். பிறவி எனும் பிணிக்கு மருந்து இறைவனே.

அடுத்து, வேதங்கள் ஐயா என ஒங்கி ஆழ்ந்த கன்ற நுண்ணியன்’ சிவ பரம்பொருளேயன்றோ? அடுத்து அவ்’ ஆண்டவன் கண்ணுக்கினியானாகக் காட்சி தருகின்றான்.

கண்டார் காதலிக்கும் கண் நாதன் என் காளத்தியான்’ என்று சுந்தரரும் திருக்காளத்தியப்பரைப் போற்றுவர். அகத்திற் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்’ என்பார் திருமூலர். சிவபெருமானை அகத்தில் நிறுத்தி யன்றோ காணுதல் வேண்டும். அவனைப் AL—] TT L—.