பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 திருவெம்பாவை விளக்கம்

“இத்தகைய அரியவனும் பெரியவனுமாய் உள்ள சிவ பெருமானை நாம் எல்லோரும் அறியும் ஆற்றல் உடையோம் என்று உண்மையாகப் பொய்யுரைகளையே சுரக்கின்ற பாலெனவும், மலையினின்றும் கிடைக்கின்ற தேனெனவும் போல இனிக்க இனிக்கப் பேசுகின்ற வாயினையுடைய வ ஞ் ச கி! நின்னுடைய வாயிற் கதவினைத் திறப்பாயாக’ என்று நீராடக் கூட்டிப் போக வந்திருந்த கன்னியர் பொய்யுறங்கும் கன்னியரை விளித்துக் கூறினர். நாம் போலறிவோம் என்று உள்ள பொக்கங்களே பேசும் பாலூறு தேன்வாய்ப் படிறீ கடை திறவாய்’ சற்றுக் கூடுதலான ஏச்சுரை தான். ஏனெனில், ‘ஏலக் குழலி’ என்று புகழ்ந்து விளித்தவர்கள் இப்போது * வஞ்சகி என முத்தாய்ப்பு வைக்கின்றனர். அறிய மாட்டாததோர் அருமைப் பொருள் ஒன்றனை அறிந்தேன் என்று அடக்கமின்றி இனிக்கப் பேசும் திறம் அவள் திறமாதலின் அவளை படிறீ - வஞ்சகீ என்று அழைக்க வைத்தது. படிற்றொழுக்கம் வஞ்சகவொழுக்கம் என்று சிலப்பதிகாரம் பேசும். மயக்கவுணர்வு உடையவர்கள் சிவனை அறியமாட்டார்கள். மனத்தை ஒருமுகப் படுத்தா மற் போனால் - சித்தத்தைச் சிவன்பாலே வைக்காமற் போனால் அவன் எளிதில் வயப்படுபவன் அல்லன். மலையாக அவன் வெளிப்பட்டும் திருமாலும் நான்முகனுமே அறிந்து கொள்ள முடியாமற் போயிற் றென்றால் மற்றையோர் முயற்சிகள் எம்மாத்திரம்? இதனையே சிவஞான சித்தியார் சுபக்கச் செய்யுளொன்று ‘ குறைவிலா அளவினாலும் கூறொனாதாகி நின்ற இறைவனார் கமலபாதம்’ என்று குறிப்பிடுகின்றது. அளக்கலாகாத பொருள் ஆண்டவன் ஆதலின் அவனுக்கு ஒப்புமை கூற ஒர் அளக்கலாகாத பொருளையே மணிவாசகர் எடுத்துக் கொண்டார் எனலாம். அளக்கல் ஆகா அளவும் பொருளும் துளக்கல் ஆகா நிலையும் தோற்றமும், வறப்பினும் வளம்தரும் வண்மையும்