பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. பாலசுப்பிரமணியன் 29

மலைக்கே’’ என்று மலையினது மாட்சியினை நன்னுால் அ | த பவணந்தி முனிவர் பகருவர். வஞ்சகர் பேச்சு பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலிருக்கும். பால் சுவை யுடையது; தேன் அதனினும் சுவையுடையது. பாலொடு பதன் கலந்தற்றே பனிமொழி வாலெயிறு ஊறிய நீர்’ வண்பர் வள்ளுவப் பெருந்த கை . . பாலுறுதேன் வாய்ப் ப| l’ என்பது அவள் வாயில் பாலும் தேனும் ஊறுவது போலும் பொய்யே மெய்போலப் பேசப்படும் என்றார். காளிருந்து உறங்கும் கன்னியர் எழுந்து வெளியே வாமையின், வெளியில் - வாயிற்படிக்கு வெளியில்

அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்த கன்னியர் சிவபெருமான் திருப்பெயரை ஒதத் தொடங்கினர். மண்ணில் வாழ்வாரும், விண்ணில் வாழும் தேவர்களும், பாதாள லோகத்தில் வாழ்வாரும் மற்றையோரும் அறிதற் வியலாத தன்மையுடையவனது வடிவத்தையும், நம் போன்ற உயிர்களை ஆட்கொண்டருளிக் குற்றங்களைப் போக்கும் அருட்பண்புகளையும் புகழ்ந்து பாடி, சிவனே சிவனே என்று ஒலமிட்டுக் கதறி அபயம் அபயம் என அவனருளைப் பரவி நின்றாலும் நீ அவன் பெருமையைஅருமையை-சீர்மையை-எளிமையை- அருளுடைமையை அறியப் போவதில்லை. நீ உறக்கத்தினின்றும் இப்பொழுது விழிப்பதாயும் இல்லை. இதுதான் உன்னுடைய இயல் பானால் நாங்கள் என்ன செய்யக் கடவோம் என்று தங்களையே நொந்து கொண்டனர்.

ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்’’. இஃது இறைவனின் அருமையைச் சுட்டிய தொடராகும். | || கோலமும் நம்மையாட்கெ ாண்டருளிக் கோதாட்டும் சிலமும் பாடிச் சிவனே சிவனே என்று ஒலமிடினும் உணராய் உணராய் காண்’ - இத்தொடர்கள் அடிய வர்கள்பால் அம்பலத்தாடும் அரசாம் சிவன் காட்டும் எளிமையைச் சுட்டி நிற்கின்றன.