பக்கம்:திருவெம்பாவை-விளக்கம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* *

30 திருவெம்பாவை விளக்கம்

‘சிவனே சிவனே என்று இரண்டு முறை அடுக்கி வந்தது அவனே அடைக்கலம் தர வல்லவன் எனும் குறிப்பினது. உணராய் உணராய்’ என இருமுறை அடுக்கி வந்ததும் இன்னும் கதவு திறக்காமல் உள்ளிருந்து உறங்கிக் கிடக்கும் கன்னியரின் அறியாமையினை அறிவுறுத்தியவாறு. பரிசு என்ற சொல் கழிவிரக்கப் பொருளில் வந்தது. உன் இயல்பு இதுவாயின் நாங்கள் என்ன செய்ய வல்லேம் என்னும் ஆற்றாமைக் குறிப்பினை அறிவுறுத்தியவாறாகும்.

மாலறியா நான்முகனும்

காணா மலையினைநாம் போலறிவோம் என்றுள்ள

பொக்கங்க ளே பேசும்

பாலூறு தேன்வாய்ப்

படிறீ கடைதிறவாய்! ஞாலமே விண்ணே

பிறவே அறிவரியான்

கோலமும் நம்மை ஆட்

கொண்டருளிக் கோதாட்டுஞ்

சீலமும் பாடிச்

சிவனே! சிவனே! என்(று)

ஒலம் இடினும்

உணராய் உணராய்காண்!

ஏலக் குழலி

பரிசேலோர் எம்பாவாய்!